மலேசிய மக்களாகிய நாம் இப்புத்தாண்டில் புத்தாக்கத்தை மேற்கொள்வோம்.

மலேசிய மக்களாகிய நாம் இப்புத்தாண்டில் புத்தாக்கத்தை மேற்கொள்வோம்.

புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இனிய நாளில், மலேசிய மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று  மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் திரு.குணாளன் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

 

ஒவ்வோர் ஆண்டும் என்னற்ற செயல்களைப் புரிந்து வெற்றிய அடைந்து வரும் வேளையில் பிறக்கும் 2019-ஆம் ஆண்டு நமக்கு மேலும் ஒரு மைல் கல்லாக அமைய வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். நமக்குள் சமத்துவமும், இறையாண்மையும் மேலோங்கினால் மட்டுமே அனைவரிடத்திலும் அன்புக் காட்ட இயலும்.

 

அதே வேளையில், நல்லதை நாடி தீயதை விரட்டி நம் முன்னேற்றப் பாதைக்கு விளக்கேற்றுவோம் என இவ்வாண்டில் உறுதியேற்போம். மேலும் நாட்டின் அரசியல் சூழலையும் பொருளாதார சிக்கலையும் கொஞ்சம் கவனத்தில் நிறுத்தி அதனை களைவதற்கு வழி காண்போம். நம்பகத்தண்மைக் கொண்ட செய்திகளை மட்டுமே நாம் பகிர்வதில் கவனம் செலுத்துவோம். ஏனெனில் பொய்யான தகவலை பரப்புவதால் எவ்வித நன்மையும் நமக்கு கிடைக்காது எனபதை முதலில் உணர வேண்டும்.

 

ஆகவே, நாம் அனைவரும் இந்தப் புதிய ஆண்டில் புதியதைச் செய்து அதன் வழி  நன்மை பெறுவோம். உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.