பேராக் மஇகா கிளைகள் கட்டிய 95% விழுக்காட்டுச் சந்தா கட்டணம்  மஇகாவின் மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

மஇகாவின் நடமாடும் சந்தா மையத்தின் இறுதிப் பயணம் பேராக் மாநிலத்தில் முடிவுற்ற நிலையில் அம்மாநிலத்தில் இருந்து 95% விழுக்காடுக் கிளைகள் சந்தாவைச் செலுத்தியுள்ளன. இதன் வழி நமது ம இகாவின் மேல் இந்தியர்கள் வைத்துள்ள நம்பிக்கை என்றுமே குறையாது என ஊர்ஜிதமாகின்றது என ம இகாவின் நிர்வாகச் செய்லாளர் டத்ததோ எம்.அசோஜன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று 500-க்கும் மேற்பட்ட கிளைகள் மாநில செயலகத்தில் சந்தாக் கட்டணத்தை கட்டியுள்ளனர் என்று அம்மாநில தலைவர் டத்தோ இளங்கோ அவர்கள் உறுதிப்படுத்தினார். மேலும் இதர கிளைத்தலைவர்கள் நேரடியாக கட்சியின் தலைமையகத்திலும் செலுத்தியவண்ணம் இருக்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதன் வழி சுமார் பேராக் மாநிலத்தில் உள்ள 879 மஇகா கிளைகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட கிளைகள் தங்களின் சந்தாவைக் கட்டியுள்ளனர் என்பது மகிழ்ச்சியான் செய்தியாகும்.

மேலும் சந்தா பணத்தினைச் செலுத்த இன்று வரை கால அவகாசம் உள்ளதால் இதர கிளைகளும் தங்களது சந்தாவை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாக நிர்வாக செயலாளர் அவார்கள் தெரிவித்தார்.

அதேவேளையில் பண விரையும் நேர விரையத்தையும் கருத்தில் கொண்டு இம்முறை அமல்படுத்தப்பட்ட சந்தா வசூல் முறை பேராக் மாநில கிளைத் தலைவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது என நினைவுக்கூர்ந்தார்.