|
|
||
தேசியத் தலைவர்
டத்தோ ஜி.பழனிவேல், மலேசிய இந்தியர் காங்கிரசின் 8வது தலைவராக 2010 டிசம்பர் மாதம் 6ம் தேதி பொறுபேற்றுக் கொண்டார். ம.இ.கா –வில் இவர் படிப்படியாக உயர்ந்து இப்பதவியை ஏற்றார். இவரது சொந்த ஊரான பினாங்கில் 1968ல் இவர் ம.இ.கா அங்கத்தினரானது முதல் அது துவங்குகிறது. சுமுகமான பதவி மாற்றத்தின் மூலம் டத்தோ ஸ்ரீ எஸ்.சாமிவேலுடமிருந்து இவர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் . டத்தோ பழனிவேல் தற்போது பிரதமர் துறையின் அமைச்சராக இருக்கிறார். இவர் 2010 ம் ஆண்டு மே மாதம் செனட்டராக நியமிக்கப்பட்டார். முதலில், 1995ல் சமூகநல மற்றும் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் மக்களவைச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார் . 1999 லிருந்து 2044 வரை மலேசிய கிராம மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 2005ல் சமூகநல குடும்ப மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். 2008 மார்ச் வரை அப்பொறுப்பை அவர் தொடர்ந்து வகித்து வந்தார். ம.இ.காவில் இவர் ஆற்றிய பங்கு இவரது 19வது வயதில் -1968ல் பினாங்கு ஜெலுதோங் கிளையில் இவர் அங்கத்தினராகச் சேர்ந்ததிலிருந்து துவங்குகிறது. அன்றிலிருந்து மக்கள் நலன் கருதி –குறிப்பாக மலேசிய இந்தியர் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல்வேறு பொறுப்புக்களை ஏற்று அயராது பாடுபட்டுள்ளார். அந்த ஒவ்வொரு பொறுப்புக்களை ஏற்று அயராது பாடுபட்டுள்ளார். அந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்களைச் சென்று அடையும் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டிருக்கிறார். அவை சமுதாயத்திற்குப் பல அனுகூலங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அரசாங்கத் துறையிலும், தனியார் துறைகளிலும் பல வாய்ப்புகளை அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வழிவகைகளை மக்கள் அறியச் செய்திருக்கிறார். டத்தோ பழனிவேல் 1972ம் ஆண்டு மலாயா பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்து பி.ஏ. பட்டம் பெற்றார். முதன் முதலில் இவர் கோலாலும்பூரில் உள்ள கூன் இன்ஸ்ட்டியூட்டில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் குவாந்தானில் உள்ள மக்தாப் அடாபியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில்தான் இவர் மலேசிய இந்தியர் காங்கிரசின் பெட்டாலிங் கிளைச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 1987ல் டத்தோ பழனிவேல் அப்போதைய ம.இ.கா தலைவரும் பொதுப் பணித்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எஸ். சாமிவேலுவின் பத்திரிக்கைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசியல் நீரோட்டத்தின் மையப்பகுதியில் தனது பயணத்தைத் துவங்க அது சிறந்த களமாக அமைந்தது . இவர் நாட்டின் பொதுத் தேர்தலில் போட்டியிட 1990ல் ஒரு வேட்பாளராகத் தேர்தெடுக்கப்பட்டார் . அப்போது அவர் அடைந்த அந்த வரலாற்றுப்பூர்வமான வெற்றியைத் தொடர்ந்து அவரது பின்வாங்கா அரசியல் பயணம் தொடர்ந்தது. அவர் மலேசிய இந்தியர் காங்கிரசின் புதிய எழுச்சிமிக்க தலைவராக நிமிர்ந்து நின்றார். மக்களின் பேராதரவை குறிப்பாக இந்தியர் சமுதாயத்தின் பேராதரவை ம.இ.கா பெறும் புதியப்பாதையில் அதை வழிநடத்திச் செல்லும் உறுதிமொழியை அவர் வழங்கினார். டத்தோ பழனிவேலுக்கு டத்தீன் கனகம் ராமானுஜம் என்னும் மனைவியும் 4 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகனின் மூலம் இவருக்கு மூன்று பேரன்கள் உள்ளனர்.
|
செனட்டர் டத்தோ ஜி.பழனிவேல் |