ம.இ.கா பிரிவுகள்

புத்ரா எம்.ஐ.சி - இவ்வமைப்பு மூலமாக மலேசிய 18 வயதிலிருந்து 30 வரையிலும் உள்ள இந்திய இளைஞர்களை சமுக அரசியலின் வழி நல்வழியில் கொண்டு செல்ல முடியும். தலைவர்களுடனான உறவை மேன்படுத்திக் கொள்ளவும், தரம் வாய்ந்த இளைஞர்களை புத்ரா எம்.ஐ.சியில் இணைத்துக் கொள்வதும் இதன் உன்னத நோக்கத்தில் ஒன்றாக இருக்கிறது.

Website: http://www.puteramic.com

.....................................................................................................................................................................................................

ம.இ.கா மகளிர் பிரிவு, ம.இ.காவோடு கைக்கோர்த்து மலேசிய இந்திய பெண்களின் நிலையை உயர்த்த செயல்பட்டு வருகிறது. நல்லதொரு வாய்ப்புகள் இந்திய பெண்களுக்கும் தரப்பட்டால் அவர்களின் திறன்களை வெளிக்குணர ஏதுவாக இருக்கும் என்று இந்த அமைப்பு நம்புகிறது.

Website: http://www.wanitamic.com

.....................................................................................................................................................................................................

ம.இ.கா இளைஞர் பிரிவு தகுதியுள்ள இளையோர்களை கட்சியில் இணைக்க பாடுபட்டு வருகிறது. பெரும்பாலான பட்டதாரிகள் இவ்வமைப்பில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய சமூகத்திற்காக தங்களால் இயன்றதை செய்திட இப்பிரிவு திட்டங்களை தீட்டி வருகிறது.

.....................................................................................................................................................................................................

ம.இ.கா புத்திரி பிரிவு
ம.இ.கா புத்திரி பிரிவு, ம.இ.காவோடு இணைந்து இளையோர்களை கட்சியில் இணைக்க முணைப்பு காட்டி வருகிறது. இவ்வமைப்பு ம.இ.கா மகளிர் பிரிவோடு இணைந்து மலேசிய இளையோர்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது.

  ம.இ.கா கரங்கள்

ஆசிய மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் 1025ஆம் ஆண்டு சோழப் பேரரசின் பொற்காலமாக ஆட்சி புரிந்த காலத்தில் கடாரத்தை நாடினான் என்பது சரித்திரம். அதேபோன்று 2006ஆம் ஆண்டு பூஜாங் பள்ளத்தாக்கின் அருகிலுள்ள கெடா மாநிலத்திலுள்ள சுங்கைப்பட்டாணி, செமிலிங் என்னுமிடத்தில் மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் மீண்டுமொரு சரித்திரத்தைப் படைத்தார். அதுதான் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகம் 228 ஏக்கர் நிலப்பரப்பில் 500 மில்லியன் ரிங்கில் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம், பல் மருத்துவம், மருந்தியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளைக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் லண்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து கல்வித் திட்டத்தினை மேற்கொள்கின்றது.

Website: http://www.aimst.edu.my

.....................................................................................................................................................................................................

மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோப் டீடேக்

இந்திய சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றுவதற்காகவும், ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கி கல்விக் கற்ற இந்திய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும் கடந்த 1984ஆம் ஆண்டு மஇகாவின் கல்விக் கரமான மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டது. மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் கடனுதவித் திட்டத்தின்வழி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படித்து பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு கல்விக் கடனுதவித் திட்டமான கோப் டீடேக் என்னும் கூட்டுறவுக் கழகத்தை ஏற்படுத்தினார். இதன் அங்கத்தினர்கள் மாதம் குறைந்தது 25/- ரிங்கிட் செலுத்தி அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக சேமிப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 1982 முதல் 1985ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 4.5 மில்லியன் ரிங்கிட் செலவில் வாண்டோ கல்லூரியை வாங்குவதற்கும் மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் முக்கியக் காரணமாக இருந்தார்.

Website: http://www.mied.com.my

.....................................................................................................................................................................................................

சமூக வியூக அறவாரியம்

இந்திய சமுதாயத்தில் நிலவுகின்ற பல்வேறு சமூகச் சீர்கேடுகளைக் களையவும், சமூக மேம்பாடுகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளவும் 1997ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி, சமூக வியூக அறவாரியம் நிறுவப்பட்டது. அரசாங்கத்தின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

Website: http://www.yss.my

.....................................................................................................................................................................................................

டேஃப் கல்லூரி

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள சிரம்பானில் நிறுவப்பட்டுள்ள டேஃப் கல்லூரி மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் வெற்றிக்கு மேலும் ஒரு மைல் கல் ஆகும். இக்கல்லூரி 1990ஆம் ஆண்டு மொத்தம் 22 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ து ன் டாக்டர் மகாதீர் முகம்மது அவர்கள் இக்கல்லூரிக்கு 8 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு வழங்கினார்.

Website: http://www.tafeseremban.edu.my

.....................................................................................................................................................................................................

சமூக மறுவாழ்வு அறவாரியம்

மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி நிதி மற்றும் பல்வேறு நிலைகளில் நிதியுதவி வழங்கும் பொருட்டு, கடந்த 2002ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் சமூக மறுவாழ்வு அறவாரியத்தை நிறுவினார். சமூக மேம்பாட்டுக்கு இந்நிறுவனம் தொடர்ந்து பங்காற்றி வருகின்றது.

தகவல் ஊடகம்
காணொளி
நிழல் படம்
அமைப்பு
அமைப்பு
தொடர்புக்கு
முகவரி
கிளைகள்

© 2011 மலேசிய இந்தியர் காங்கிரஸ்