ம.இ.கா செய்திகள்
இலவச இசை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு களித்தனர்
கோலாலம்பூர் 9, மே (மஇகா) -- அண்மையில் மஇகா தலைமையகக் கட்டிடத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் பண்டிட் மாருதி பட்டேல் மற்றும் பண்டிட் பாஸ்கர் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இசைப் பிரியர்கள் ஆர்வமுடனும், ஆரவாரத்துடனும் கேட்டு ரசித்தனர். ...
 மஇகாவில் இணைவதற்கு நகர்ப்புற இளம் நிபுணர்கள் ஈர்க்கப்படுவார்கள்
கோலாலம்பூர் 7, மே (மஇகா) -- நகர்ப்புறங்களிலுள்ள இளம் நிபுணர்களை கட்சியில் இணைப்பதற்கு மஇகா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. ...
 மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின்
கோலாலம்பூர் 4, மே (மஇகா) -- விசாகத் தினத்தைக் கொண்டாடும் அனைத்து பெளத்த மதத்தினருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்கள் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். நாம் ஒவ்வொருவரும் மன வேறுபாடுகளைக் களைந்து, அனைத்து மதங்களும் கூறும் நன்னெறிகளை மதித்து வாழ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ...
 மஇகா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் - டான்ஸ்ரீ கே.எஸ். நிஜார் அறிவிப்பு
கோலாலம்பூர் 4, மே (மஇகா) -- இந்தியர்களின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான அடையாள ஆவணங்கள் மீது மஇகா இளைஞர் மற்றும் பிகேஆர் உறுப்பினர்களுக்கிடையில் பிரதமர்த்துறை அலுவலகத்தின் முன் நேற்று ஏற்பட்ட அசம்பாவிதம் மிகவும் வேதனைக்குரியது என்று மஇகாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே.எஸ். நிஜார் தெரிவித்தார். நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், பூச்சோங் தொகுதித் பிகேஆர் தலைவர் முரளி சினமுட்டும் வகையில் தகாத வார்த்தையை மஇகா இளைஞர்கள் மீது பிரயோகம் செய்திருப்பினும், மஇகா இளைஞர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் வன்செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பிகேஆர் உறுப்பினர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மஇகா இளைஞர்கள் பொறுமை காத்திருக்க வேண்டும். ...
 மஇகாவின் மூத்த தலைவர்களைக் கொண்ட பேரவை ஒன்று அமைக்க வேண்டும்
கோலாலம்பூர் 4, மே (மஇகா) -- இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக மஇகா தேசியத் தலைவரால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் வெற்றியடையவதற்கும், ஆதரவு வழங்குவதற்கும், மஇகாவில் முன்பு சேவையாற்றி வந்துள்ள மூத்த தலைவர்களைக் கொண்ட பேரவை ஒன்று அமைக்க தாம் விருப்பம் கொண்டுள்ளதாக முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ க. குமரன் கூறினார். ...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13
|