ம.இ.கா வரலாறு

மலேசிய இந்தியர் காங்கிரஸ் மலேசியாவின் பழம்பெரும் கட்சி. 1946ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இது துவங்கியது. யுத்தத்தால் ஏற்பட்ட துயரங்களுடன் தொடர்ந்து போராடவும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், யுத்தத்திற்குப் பிந்திய தேச அபிவிருத்தியில் இந்தியர் சமுதாயத்தைப் பிரதிநிதிக்கவும் இது துவங்கப்பட்டது . இதன் துவக்கத் தலைவர் ஜோன் ஏ. திவி
(1946 – 1947)

ம.இ.கா தனது துவக்க காலத்தில் கீழ்க் கண்ட இலட்சியங்களுக்காகப் போராடியது.

  • தேச விடுதலை – ஜனநாயக வாழ்வு
  • இனங்களுக்கிடையே ஒற்றுமை – இணக்கப் போக்கு ஒத்துழைப்பு
  • ஒட்டுமொத்த செழிப்பான வாழ்வு , தேச நிலைப்பாடு
  • தேசத்தின் எதிர்காலத்தில் இந்தியர் சமுதாயத்திற்கு நியாயமான பங்கு

.....................................................................................................................................................................................................

ஆரம்பக் காலத்தில் கட்சி சோதனையான காலத்தில் எதிர்நோக்கியிருந்தது, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகவும், காலனித்துவ ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தினையும் கட்சி கொண்டிருந்த காலம் அது. சுதந்திர வேட்கை மேலோங்கி இருந்த காலம் அது. தொடர்ந்து, சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் மேம்பாட்டிலும், கட்சி அதன் கடப்பாட்டைக் கொண்டிருந்தது. காலனித்துவ ஆட்சியை மிகவும் தீவிரமாக எதிர்த்தவர் மஇகாவின் இரண்டாவது தேசியத் தலைவர் திரு. பூத் சிங் அவர்கள் (1947-1918) ஆங்கிலேயர் முன்மொழிந்த மலாயான் யூனியன் அரசியல் அமைப்பைப் பற்றி தெரிந்தவர். மலாயான் யூனியன் அரசியல் அமைப்பு இந்தியர்களின் குடியுரிமை அவர்கள் பிறந்த நாட்டின் (Jus Soli) அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறியிருந்தாலும், அவர்களின் பல சலுகைகளை தெளிவாக விளக்கவில்லை. பின்னர் துன் தான் செங் லோக் அவர்களின் தலைமையில் வரையப்பட்ட கூட்டரசுப் அரசியல் அமைப்பு சமத்துவத்தை நிலைநாட்ட அமைக்கப்பட்ட அகில மலாயா கூட்டு நடவடிக்கை மன்றத்தில் (AMCJA) மஇகாவும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

.....................................................................................................................................................................................................

அதன் பிறகு கட்சியின் இரண்டாவது காலக்கட்டமாக, திரு. கே. இராமநாதன் அவர்கள் கட்சியின் மூன்றாவது தேசியத் தலைவராகப் ( ) பொறுப்பேற்றபோது தொடங்கியது. மலாய் மற்றும் சீன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அம்னோ மற்றும் மசீச அல்லாமல் அரசுடன் ஒத்துழைக்காவிடில் அதனால் ஏற்படும் தோய்வு நிலை ஏற்படும் என்தனை திரு. கே. இராமநாதன் அவர்கள் உணர்ந்தார். அதன்படி, கடந்த 1957ஆம் ஆண்டு டத்தோ ஓன் பின் ஜாபார் அவர்களின் ஐஎம்பி (IMP) மற்றும் இதர சமூகக் கட்சிகளுடன் இணைந்து கோலாலம்பூர் நகராட்சி தேர்தல் மஇகா போட்டியிட்டது. மலேசிய அரசியலில் கூட்டணி அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் இயக்கமே வெற்றி வாய்ப்பைக் கொணரும் என்ற நிலையை 1952ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தேர்தலின் வழி மஇகா உணர்ந்தது.

.....................................................................................................................................................................................................

அம்னோ மற்றும் மசீச ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் வழி மஇகா மூன்றாவது கூட்டணிக் கட்சியாக திரு. கே. எல். தேவாசர் அவர்கள் நான்காவது தேசியத் தலைவராக (1951-1955) பொறுப்பேற்றபோது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மஇகாவிற்கு உடன்படிக்கை என்பது புதியது அல்ல. இந்நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கிடையில் அரசியலில் நேர்மை என்பது ஓர் அடிப்படை உரிமையாக இருந்து வருவதினால், மஇகா எப்பொழுதுமே மலாயா என்ற அமைப்புடன் இணைந்து செயலாற்றுவதிலேயே நம்பிக்கைக் கொண்டுள்ளது. அதன் மிதமான போக்கும், சிறந்த சாத்தியக் கூறுகளும்தான் மஇகாவை (AMCJA) உடனும், அதன் பின்னர் IMP-உடன் இணைந்து பணியாற்றியது. இந்தக் கூட்டணியே பின்னர் செயலாக்கம் நிறைந்த, திறன் வாய்ந்த அரசியல் நுணுக்கங்களைக் கொண்ட மலாயாவாக விளங்கியது.

.....................................................................................................................................................................................................

அதன் பிறகு, மஇகாவின் சரித்திரத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கம் மூன்றாவது காலக்கட்டம் எனலாம். கட்சியின் ஐந்தாவது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற துன் வீ. தி. சம்பந்தன் அவர்கள் கிளைகளுடன் சேர்த்து உறுப்பிய எண்ணிக்கையையும் உயர்த்தி, ஒரு பெரிய கட்சியாக உருவாக்கினார். கூட்டணியில் ஒரு வலுவான கட்சியாக இடம் பிடிக்கச் செய்தார். இறுதியில் 1952ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்றபோது, சுதந்திர பிரகடன சாசனத்தில் கையொப்பமிட்டவர்களில் மறைந்த துன் வீ. தி. சம்பந்தன் அவர்களும் ஒருவர். இந்தக் காலக்கட்டத்தில் கட்சி மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியது. தோட்டங்கள் துண்டாடப்பட்டன. இதனால் தோட்டங்களை வாழ்வாதரமாக் கொண்டிருந்த மலேசிய இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. தோட்டங்களை துண்டாடப்படுவதையும், அதன்வழி தொழிலாளர்கள் குடிபெயர்ந்து மாற்று இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் ஒரு கூட்டுறவுக் கழகம் அமைக்கும் திட்டத்தை கட்சி கொண்டிருந்தது. அதன்வழி உதயமானதுதான் தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகம் ஆகும்.

.....................................................................................................................................................................................................

அடுத்து, கட்சியின் ஆறாவது தேசியத் தலைவராக (1973-1979) பொறுப்பேற்ற டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் காலத்தில் கட்சியின் நான்காவது காலக்கட்டமாக இருந்தது என்று கூறலாம். இவருடைய காலத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாடளாவிய நிலையில் கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. அதற்குரிய பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்; கட்சியின் நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தேசிய முன்னணிக் கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சி உறுப்பினராக மஇகா இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழகம் மற்றும் எம்ஐசி யூனிட் டிரஸ்ட் போன்ற பொருளாதார நிறுவனங்களை துணிவுடன் அமைத்ததுடன், உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக கல்வி நிதி ஒன்றினையும் தொடங்கியது. தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறை பயிற்சிகளை மேற்கொள்ளும் உயர்க்கல்வி பயிலும் மலேசிய இந்திய மாணவர்களுக்காக மலேசிய இந்திய உபகாரச் சம்பளம் வாரியமும் தொடங்கப்பட்டது. அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என்ற முறையில், மஇகா தொடர்ந்து நாடு மற்றும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக சரியான, சிறந்த சாத்தியங்களைக் கையாண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் பொதுவான நோக்கத்தைக் கொண்டு, ஆக்ககரமாக சேவையாற்றி வருகிறது.

.....................................................................................................................................................................................................

ஜோன் ஏ. திவி

தகவல் ஊடகம்
காணொளி
நிழல் படம்
அமைப்பு
அமைப்பு
தொடர்புக்கு
முகவரி
கிளைகள்

© 2011 மலேசிய இந்தியர் காங்கிரஸ்