நாட்டின் 527-வது தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழா

நாட்டின் 527-வது தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழா

Its Beginning! 30 Jun 2017
பெட்டாலிங் ஜெயாவில்
08:00 AM - 02:00 PM
This event is passed

தமிழ்ப் பள்ளிகளின் அடைவுநிலை மாணவர் மேம்பாடுகளில் இனி கவனம் செலுத்துவோம் டாக்டர் சுப்ரா அறைகூவல்

கோலாலம்பூர் – தலைநகரின் செராஸ் பகுதியிலுள்ள மக்கோத்தா வட்டாரத்தில் நாட்டின் 527-வது தமிழ்ப் பள்ளியாக அமையும் மக்கோத்தா தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (30 ஜூன் 2017) காலையில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், அந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது சில முக்கிய கருத்துகளை மக்களின் சிந்தனைக்கு முன் வைத்தார்.

அவர் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்கள்:

  • மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பல வெற்றிகரமான திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. சமுதாயம் ஒன்றாக செயல்பட்டதன் காரணமாகவே நீண்ட காலமாக கனவாகவே இருந்து வந்த செராஸ் பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி இன்று நனவாகியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாட நாம் அனைவரும் தகுதியுள்ளவர்கள்.
  • இத்தனை ஆண்டுகளாக நாம் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை நிலைநிறுத்துவதற்கும், தமிழ்ப் பள்ளிகளின் வெளிப்புறத் தோற்றத்தையும், அதன் சீரமைப்புப் பணிகளிலும் நாம் கவனம் செலுத்தி வந்தோம்.
  • இனி நமது கவனமும், உழைப்பும், முயற்சிகளும் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் அடைவு நிலையை உயர்த்துவதற்கும், மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதாச்சாரங்களை மேலும் சிறப்பாக்குவதற்கும் பயன்பட வேண்டும்.
  • அந்தக் காலத்தில் தோட்டப் புறங்களில், அரசாங்கமும், பிரிட்டிஷ் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் தேவைகளுக்காக நாம் தமிழ்ப் பள்ளிகளை அமைத்தோம். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. நமது சமுதாயம் நடுத்தர வர்க்க மக்களையும் (middle class), அவர்களுக்கும் மேலான உயர் நடுத்தர மக்களையும் (upper middle class) அதிக அளவில் கொண்ட சமுதாயமாக நாம் உருவெடுத்திருக்கிறோம்.
  • எனவே, இனி நாம் கட்டக் கூடிய தமிழ்ப் பள்ளிகள் அதிக அளவிலான வசதிகளையும், தரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்ற ஆர்வமும், எண்ணமும் ஏற்படும்.
  • அந்த வகையில் நாட்டின் 527-வது தமிழ்ப்பள்ளியாக திகழப்போகும் பள்ளி பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி சிலாங்கூரில் உள்ள 99-வது தமிழ்பள்ளியாகும். இப்பள்ளி 21.08 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படவிருக்கிறது. இப்புதியப் பள்ளி 24 வகுப்பறைகள், பாலர் பள்ளி, கணினி அறை, நூலகம், திடல் போன்றவற்றைக் கொண்டிருக்கும். இதன் கட்டுமானப் பணி அடுத்தாண்டு இறுதி வாக்கில் முழுமைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பள்ளி முழுமையாகச் செயல்படும் போது நாட்டில் அதிநவீன தமிழ்பள்ளியாக இது திகழும்.
  • இந்தப் பள்ளி அமையவிருக்கும் செராஸ் பண்டார் மக்கோத்தா பகுதியும் நடுத்தர, உயர் நடுத்தர மக்களை அதிகம் கொண்ட வட்டாரமாகும்.
  • எனவே, இனி நாம் சகல வசதிகளுடன் கூடிய பள்ளிகளைக் கட்டிவிட்டு, அதற்கேற்ற மாணவர் அடைவு நிலையை உருவாக்கவும், சிறந்த மாணவர்களை உருவாக்கவும் வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்ப் பள்ளிகள் குறித்து நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.
  • தமிழ்ப் பள்ளி மாணவர்களின் அடைவு நிலையை உயர்த்துவதற்கும் அவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை வளர்ப்பதற்கும் இனி மஇகாவும் நாமும் பாடுபடுவோம். தமிழ்ப் பள்ளிகளில் படிப்பவர்கள் சிறந்த அடைவு நிலையை அடைகிறார்கள், சிறந்த மாணவர்களாக அகத்திலும், புறத்திலும் திகழ்கிறார்கள் என்ற நிலை உருவானால்தான் தங்களின் பிள்ளைகளை அதிகமான பெற்றோர் – அதாவது அதிகமான நடுத்தர மக்கள் – தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். நாம் இத்தனை வசதிகளுடன் கட்டும் தமிழ்ப் பள்ளிகளும் சிறந்த அடைவு நிலை கொண்ட மாணவர்களை உருவாக்குகின்றன என்பதுதான் நமக்கும் பெருமையாக இருக்க முடியும்.எனவே, தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர்த்தும், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் அடைவு நிலையை உயர்த்தும் நமது முயற்சிகளும், பணிகளும் தொடர்ந்து நடைபெறும்.
  • நாட்டில் மேலும் ஆறு புதியத் தமிழ்ப் பள்ளிகள் கட்டப்படும் என பிரதமர் 2012 – ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அந்த வகையில் ஏற்கனவே, சில பள்ளிகள் கட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டன. இதர ஐந்து பள்ளிகள், சுங்கைப் பட்டாணியில் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி, கிள்ளானில் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங் ஜெயாவில் பி.ஜே.எஸ்.ஐ. தமிழ்ப்பள்ளி, சுங்கை சீப்புட்டில் ஹீவூட் தமிழ்ப்பள்ளி மற்றும் மாசாயில் பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்பள்ளி ஆகியவையாகும். http://drsubra.com/en/2017/06/30/mahkota-tamil-sch-speech-student-performance/