நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

கோலாலம்பூர், ஜன.27-
கேமரன் மலையில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது ஒரு திருப்பு முனையாகும் என்று
ம.இ.கா தேசிய உதவி தலைவர் டத்தோ தி.முருகையா கருத்து தெரிவித்துள்ளார். ஏனெனில் இவ்வெற்றியானது தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஒர் அறிகுறியாகும்.

 நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரலாம் என்று வாரணாசியில் நடைபெற்ற பிரவாசி மாநாட்டில்  கலந்து கொண்டு தாயகம் (கோலாலம்பூர்) திரும்பும் வேளையில் டில்லி விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார். 

கடந்த பொது தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை யாரும் குறிப்பாக சாமானிய மக்கள் மறக்க மாட்டார்கள்.

இந்த அதிருப்தி அலை கேமரன் மலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வெற்றியை பறித்துள்ளது. இந்த நிலை தொடரலாம். தேசிய முன்னனி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று டத்தோ தி.முருகையா மேலும் சொன்னார்.

MIC tuntut Dr M minta maaf pada kaum India

MIC tuntut Dr M minta maaf pada kaum India

Perdana Menteri Dr Mahathir Mohamad didesak meminta maaf kepada masyarakat India susulan jenaka beliau terhadap calon PH, M Manogaran, yang dirasakan berbaur perkauman.

Menurut Ketua Penerangan MIC, V Gunalan, Mahathir permohonan maaf itu diperlukan, terutama buat pengundi India di Cameron Highlands.

“Kami sangat kesal dengan jenaka rasis Mahathir yang jelas bersifat perkauman.

“Ini kali kedua beliau menghina kaum India selepas menggunakan perkataan keling semasa pilihan raya umum ke-14 dulu.

“Justeru, MIC menyeru beliau meminta maaf kepada kaum India,” katanya ketika menghubungi Malaysiakini hari ini.

Terdahulu, perdana menteri ketika kempen untuk PH di Cameron Highlands hari ini berjenakan mengenai Manogaran.

“Tak nampak, gelap. Nampak rambut dia putih,” kata Mahathir berjenaka dalam satu ceramah di Felda Sungai Koyan, petang tadi.

Kata Gunalan kenyataan Mahathir itu yang berkata hanya boleh nampak rambut putih Manogaran kerana mukanya gelap bukan satu jenaka.

“Kami nak pengundi India Cameron Highlands menolak PH dan mengundi BN esok,” katanya.

இந்திய அரசுடனான மஇகா நட்பு தொடரும் என டான்ஸ்ரீ தெரிவித்தார்.

இந்திய அரசுடனான மஇகா நட்பு தொடரும் என டான்ஸ்ரீ தெரிவித்தார்.

 
இந்திய அரசுடன் மஇகா எந்தக் காலத்திலும் இணைந்து செயலாற்றும். குறிப்பாக அது இந்திய அரசுடன் நெருங்கிய நட்புறவை என்றுமே கொண்டிருக்கும் என நமது தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற பரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக நேரடியாகச் சந்தித்த டான்ஸ்ரீ, மஇகா இந்திய அரசுடன் எப்பொழுதும் நட்புறவைப் பேணும் எனக் கூறி நட்புப்பாராட்டினார்.

மலேசிய அமைச்சரவையில் மஇகா இடம் பெற்றிருந்தாலும் இடம் பெறாமல் போனாலும் இந்திய அரசுடனான நட்புறவை என்றுமே தொடரும் என அவர் தெரிவித்தார். புலம்பெயர்ந்த இந்தியர்களை ஒன்றிணைத்து நட்பு பாராட்டும் ஒரு உன்னத நிகழ்ச்சியாக இந்த பரவாசி பாரதீய திவாஸ் மாநாடு விளங்குகின்றது. இந்த மாநாடு புலம்பெயர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் அதேநேரத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பைத் தருகின்ற மாநாடாகவும் அமைகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் மலேசியாவிலிருந்து தான் அதிகமான பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இம்முறை மலேசியாவிற்கு இணையாக மொரிஷியஸில் இருந்தும் அதிகமான இந்தியர்கள் இந்த மாநாட்டில் பங்குப்பெற்றனர். மலேசியாவைப் பிரதிநிதித்து சுமார் 420 பேராளர்கள் இந்த மாநாட்டில் பங்குப்பெற்றனர். அதில் குறிப்பாக மஇகாவின் சார்பில் 250 பேராளர்கள் கலந்து கொண்டிருப்பதாக நமது டான்ஸ்ரீ அவர்கள் கூறினார்.

பரவாசி மாநாட்டில் கலந்துகொள்ள இரு தரப்புகளாக விண்ணப்பம் செய்வதை தவிர்த்து ஒற்றுமையைப் பேணும் வகையில் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்துள்ளார். மலேசியாவில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பிரிவினை நமக்குள் இருக்கலாம் ஆனால் பாரதீய திவாஸ் போன்ற அனைத்துலக மாநாடுகளில் பங்கெடுக்கும் பொழுது மலேசியர்கள் என்ற அடையாளத்தோடு நாம் கலந்து கொள்வதுதான் நமது ஒற்றுமையைப் புலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பரவாசி பாரதீய திவாஸ் மாநாடு தொடங்கியது முதல் இதுவரையில் மஇகா இந்த மாநாட்டில் பங்கு பெறுகின்றது இனிவரும் காலங்களில் மலேசிய பேராளர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து ஒற்றுமையோடு இந்த மாநாட்டில் கலந்துகொள்வது நமக்கான அடையாளத்தை மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார். புலம்பெயர்ந்த இந்தியர்களின் ஒற்றுமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் குறிப்பாக அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் விவாதிப்பது மிக முக்கியம் என்பதையும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் வாழ்கின்ற 2.5 கோடி இந்தியர்களில் பலர் பல்வேறு துறைகளில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தங்கள் வர்தகத்தை வெளிநாடுகளில் எப்படி மேம்படுத்த முடியும் என்ற நுணுக்கங்களை இந்த மாநாடு கற்றுத்தர வேண்டும் என்றும் நமது டான்ஶ்ரீ கேட்டுக் கொண்டார்.

பொருளாதார ரீதியில் இந்தியர்கள் மேம்படும் பட்சத்தில் உலக அரங்கில் நமக்கான மதிப்பு பன்மடங்கு உயரும் சாத்தியம் உள்ளது. ஆதலால் டிஜிட்டல் இந்தியா என்ற புதிய தொலைநோக்கு சிந்தனையோடு இந்தியா தற்போது பயணிக்கின்றது குறிப்பாக பல்வேறு துறைகளில் இந்தியா மிகச்சிறந்த அடைவு நிலையை பதிவு செய்திருக்கின்றது. வளர்ச்சி பெறும் நாடாகவும் இந்தியா இருக்கும் பட்சத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆய்வு செய்வதோடு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

http://www.anegun.com/?p=28527

பிரவாசி  மாநாட்டில் கலந்து கொண்ட ம.இ.கா பேராளர்களுக்கு  வாரணாசியில் விருந்தோம்பல்

பிரவாசி  மாநாட்டில் கலந்து கொண்ட ம.இ.கா பேராளர்களுக்கு  வாரணாசியில் விருந்தோம்பல்

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மஇகா பேராளர்களுக்கு  வரணாசியில் விருந்தோம்பல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தோம்பல் நிகழ்வு மஇகா தேசிய தலைவர் மாண்புமிகு செனட்டர் தான்ஸ்ரீ டத்தோஶ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. நமது தான்ஶ்ரீ அவர்கள் தலைமை பொறுப்பினை ஏற்று முதல் முறையாக  பங்குப்பெறும் மாநாடு இந்த வாரணாசியில் நடைபெற்று வரும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகிழ்ச்சியான சூழலில் பிரவாசி மாநாடு இன்று ஜனவரி 23ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று இரவு 7.00 மணிக்கு வாரணாசியில் உள்ள பிரபல கிரேப் , ஓயின் 5 நட்சத்திர தங்கும் விடுதியில் தான்ஸ்ரீ டத்தோஶ்ரீ விக்னேஷ்வரன் விருந்து நல்கவிருக்கிறார். ஆதலால் பங்குக்கொள்ளும் அனைத்து ம இகா பேராளர்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

களைக்கட்டியது பிரவாசி மாநாடு! முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்

களைக்கட்டியது பிரவாசி மாநாடு! முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15ஆவது புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான பரவாசி பாரதிய திவாஸ் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. ‘இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்பதுதான் இந்த மாநாட்டின் கருப்பொருள்.

மகாத்மா காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்த நாளான ஜனவரி 7 முதல் 9ஆம் தேதிவரை இந்த மாநாடு நடைபெறுவதே வழக்கம். ஆனால் அலாகாபாத் புனித கங்காவில் நடைபெறும் கும்பமேளா புனித நிகழ்விலும், 70ஆவது குடியரசு தின விழாவிலும் (ஜனவரி 26) புலம்பெயர்ந்த இந்தியர்கள் பங்கேற்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக இந்த மாநாட்டு இம்முறை நாள் மாற்றம் கண்டுள்ளது.

 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சும், உத்திரப் பிரதேச மாநில அரசாங்கமும் இந்த மாநாட்டையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளன. உலகம் முழுவதும் வாழும் பல்வேறு வகைப்பட்ட பல்வேறு மொழி பேசும் இந்தியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், சவால்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

மலேசியாவைப் பிரதிநிதித்து மஇகா சார்ப்பில் 250 பேராளர்கள் இந்த மாநாட்டில் பங்குபெற்றுள்ளார்கள். இந்த குழுவிற்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமை ஏற்கிறார். நம்பிக்கை கூட்டணி அரசாங்த்தை பிரதிநிதியாக பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் புதிய தலைமுறையினர் கல்விப், வர்த்தகம், அரசியல், விளையாட்டு, மருத்துவம், எனப் பல்வேறு துறைகளில் அங்கு தலைமை வகிப்பதோடு பல சாதனைகளையும் செய்து வருகின்றார்கள்.

அவ்வாறு சாதனைபடைத்த பிரமுகர்கள் இந்த்தகைய மாநாடுகளில் பங்கேற்று தங்களில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கி சிறப்பு விருந்தினர்களாக முக்கியத்துவம் செய்வார்கள்.

இம்முறை உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் பாரதிய திவாஸ் மாநாட்டு நிகழ்ச்சிகளில் இந்தியர்களின் வளர்ச்சியும் வாய்ப்புகளும் மரபுரிமை இந்தியர்கள் ஆகிய விஷயங்களில் ஆராயப்பட்டதுடன் சிரமங்களை எதிர்நோக்கி உள்ள இந்தியர்களுக்கு உதவும் இந்திய அமைப்புகள் மற்றும் சூரிய சக்தி ஆற்றலின் செயற்பாடு வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு, இந்தியாவின் செயல்திறன் ஆற்றல் திறன், வெளிநாட்டு இந்தியர்களின் பங்கு ,கழிவு நிர்வாக ஆற்றல், விருந்தில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பும் ஆகிய தலைப்புகளில் அமர்வுகளும் கலந்துரையாடலும் நடந்தன.

இதனிடையே இன்று ஜனவரி 23ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மாநாட்டில் பிரவாசி பாரதீய சம்மான் விருதுகள் வழங்கப்படுவது ஒரு முக்கிய அம்சமாகும். மலேசியாவில் இருந்து இதுவரை இரண்டு இந்தியர்கள் இந்த விருதை பெற்று உள்ளார்கள்.

மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவரும் எம் ஐ இ.டி. இயக்குநருமான துன் சாமிவேலுவிற்கு இந்த விருது முதன்முதலில் வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநருமான டான்ஶ்ரீ தம்பி ராஜாவிற்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்தியாவுடனான தொடர்புகளை மேம்படுத்த பாடுபட்டவர்கள் உள்ளூர், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்கள் என இந்தியாவின் புகழை மேம்படுத்தும் வகையில் ஏதேனும் துறைகளில் சிறப்பு பணியாற்றியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய தலைவர் தலைமையில் பேராளர் குழு புது டெல்லிக்கு பயணம்!

தேசிய தலைவர் தலைமையில் பேராளர் குழு புது டெல்லிக்கு பயணம்!