மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டி (சுக்கிம்) இனிதே தொடங்கியது

மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டி (சுக்கிம்) இனிதே தொடங்கியது

இந்திய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவித்துள்ள இந்தியர்களுக்கான வியூக செயல் திட்டத்தில், சமூக மேம்பாட்டின் கீழ் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் வழி தேசிய மற்றும் அனைத்துலக போட்டிகளில் பங்குக்கொள்ளும் அளவுக்குப் போட்டியாளர்களை உருவாக்க முடியும் என அரசாங்கம் இந்தியர்களுக்காக அறிவித்துள்ள வியூகச் செயல் திட்ட அமலாக்கச் செயற்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

இன்று, தஞ்சோங்மாலிமிலுள்ள உப்சி பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டாக நடைபெறும் மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டியின் (சுக்கிம்) தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ இவ்வாறு கூறினார்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் தற்போது குண்டர் கும்பல் போன்ற ஆரோக்கியமற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இளைஞர்களை மீண்டும் விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியும் என சுகாதார அமைச்சருமான அவர் மேலும் கூறினார்.

இம்மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 12 மாநிலங்களைப் பிரதிநிதித்து 1,800 விளையாட்டாளர்களும், 500 அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 11 விதமான போட்டிகளில் தங்களது திறனை வைளிப்படுத்த விருக்கின்றனர்.

இப்போட்டி விளையாட்டை துணைப் பிரதமரின் சார்பில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் ஷம்ரி அப்துல் காதிர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இன்றைய நிகழ்வில், இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், கல்வி துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், மலேசிய இந்திய விளையாட்டு – கலாச்சார வாரியத் தலைவர் டத்தோ டி.மோகன் உட்பட ம இ காவின் உயர்மட்ட தலைவர்களுடன் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Pembangkang Hanya Hebat Mengkritik, Tidak Buat Apa-Apa:- Datuk C Sivarraajh

Pembangkang Hanya Hebat Mengkritik, Tidak Buat Apa-Apa:- Datuk C Sivarraajh

26/04/2017 — Pembangkang Hanya Hebat Mengkritik, Tidak Buat Apa-Apa:- Datuk C Sivarraajh

Masyarakat India di negara ini diminta untuk bersama-sama meletakkan harapan dan kepercayan terhadap Pelan Tindakan Untuk Masyarakat India seperti yang dilancarkan oleh Perdana Menteri pada Ahad lalu.

Dalam hal ini, Ketua Pemuda MIC, Datuk C Sivarraajh yakin bahawa pelan jangka masa panjang itu adalah langkah terbaik untuk mengukir kejayaan dan pembangunan komuniti India.

“MIC dan parti-parti komponen Barisan Nasional (BN) yang diamanahkan dan komited untuk melaksanakan Pelan Tindakan Masyarakat India.

“Selain itu, penjawat awam juga perlu membantu untuk melaksanakannya dan memastikan ia berjaya,” katanya menerusi satu kenyataan hari ini.

Beliau dalam kenyataannya juga turut menyelar dakwaan pembangkang yang mengkritik usaha tersebut dengan melabelkan pelancaran pelan tersebut sebagai ‘gimik politik’.

“Para pemimpin pembangkang dari DAP dan PKR hanya pandai mengkritik tanpa menilai pentingnya pelan tindakan tersebut.

“Ketika kita bermesyuarat, pemimpin-pemimpin pembangkang telah dijemput untuk mengambil bahagian dalam memberi input dan idea mereka.

“Namun dengan ego yang tinggi, mereka tidak muncul dan kini seperti biasa mereka mengkritik usaha yang dilakukan oleh kerajaan Barisan Nasional,” kata Datuk Sivarraajh.

Tambahnya, kritikan pembangkang adalah sia-sia memandangkan mereka tidak pernah mempunyai pelan yang seumpamanya untuk pembangunan masyarakat India.

“ini menunjukkan Pakatan Harapan hanya inginkan undia masyarakat India dan kemudiannya akan mengabaikan mereka,” ujar beliau lagi.

Buat pertama kalinya, pelan tindakan pembangunan masyarakat India diumumkan seperti mana yang dijanjikan dalam Rancangan Malaysia ke-11.

Rangka tindakan 10 tahun itu merupakan hasrat kerajaan meningkatkan kedudukan masyarakat India dengan jumlah komunitinta seramai 1.7 juta orang.

Ia melibatkan peruntukan lebih RM1 bilion, dengan penekanan kepada pendidikan, penyertaan dalam perkhidmatan awam dan masalah taraf kewarganegaraan.

“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

கோலாலம்பூர் -மலேசியாவில் மே 16-ம் தேதியான இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
Read More