பினாங்கு எஸ்ஐடிஎப் – சேவை மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்

பினாங்கு எஸ்ஐடிஎப் – சேவை மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்

February 08, 2018

பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு சேவைகள் வழங்கும் பொருட்டு பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக் இலாகாவின் சிறப்பு அமலாக்க நடவடிக்கைப் பிரிவின் சேவை மையத்தை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு மாநிலத்தில் திறந்து வைத்தார்.

 

பினாங்கு மாநிலத்தின் பாகான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள பாகான் டாலான் சட்டமன்றத் தொகுதியில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த சேவை மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டாக்டர் சுப்ரா “நம் சமுதாயத்தில் உள்ள பலருக்கு எப்படி உதவிகள் பெறுவது என்று தெரியாதவர்களுக்கு இதன் மூலமாக அவர்கள் தங்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பினைக் கொடுத்து இருக்கிறோம். சென்ற ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிரதமர் அவர்கள் இந்திய சமுதாயத்திற்கு என்று பிரத்தியேகமான ஒரு வியூகத் திட்டத்தை அறிவித்தார். இந்த பத்தாண்டு வியூக   நோக்கமானது இந்திய சமுதாயத்திற்கு ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும், அவர்கள் பிரச்சினையிலிருந்து வெளியேற வேண்டும், என்ற தூய்மையான ஒரு நோக்கத்தோடு இந்த திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

 

“நீண்ட காலத் திட்டம் இந்த பத்தாண்டுத் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக இந்திய சமுதாயம் கல்வியின் மூலமாகவும் பொருளாதாரத்தின் மூலமாகவும் மற்றும் அரசாங்கத்தில் இருக்கக் கூடிய அனைத்து வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே நமது நோக்கம். முக்கியமாக கல்வி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி இந்தியர்கள் தரமான கல்வி பெற்று அதன் அடிப்படையிலே எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு நல்ல வேலை வாய்ப்புகளை பெற்று நல்ல வருமானம் பெற கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தோடு நிலையையும் மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் செயல் பட்டு வருகின்ற்றோம். இதே போலதான் மற்ற நிலையில் இருக்க கூடிய கரியங்களையும் செய்து வருகிறோம்… காரணம் இந்திய சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும் என்பது தான். உடனடியாக எதுவும் செய்ய முடியாது…

 

ஆனால் நீண்ட கால திட்டத்தின் மூலமாக அடைய முடியும். நாங்கள் திட்டத்தை போட்டு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். உதாரணமாக அரசாங்க பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர்களுக்காக கூடுதல் இடம் கொடுக்க வேண்டும் என்பதை பிரதமர் அவர்கள் ஏற்றுக் கொண்டு அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்.

2018 ஆம் ஆண்டு பல்கலைகழகங்களிலே கூடுதலான எண்ணிக்கையில் இந்திய மாணவர்களை எடுக்க வேண்டும். அரசாங்க வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்து இருக்கிறார். இது படிப்படியாக சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும். நல்ல கல்வி மற்றும் நல்ல வேலை கொண்ட சமுதாயமாக நம் சமுதாயம் மாறும்… உங்களுக்காக இதை செய்து கொண்டு வருகிறோம்” என்றும் டாக்டர் சுப்ரா தனதுரையில் குறிப்பிட்டார

 

 

 

“கீழறுப்பில் ஈடுபடும் மஇகா உறுப்பினர்கள் மீது நடவடிக்கை” – டாக்டர் சுப்ரா எச்சரிக்கை

“கீழறுப்பில் ஈடுபடும் மஇகா உறுப்பினர்கள் மீது நடவடிக்கை” – டாக்டர் சுப்ரா எச்சரிக்கை

February 06, 2018

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14 வது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் மஇகா வேட்பாளர்களை தோற்கடிக்க கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் மஇகா உறுப்பினர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

மஇகாவின் தேசியத் தலைவர் என்ற அடிப்படையில் கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தமது கடமையாகும் என சுகாதார அமைச்சருமான அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்று (5 பிப்ரவரி 2018) போர்ட்டிக்சன் சமூக மண்டபத்தில் நெகிரி செம்பிலான் மாநில மஇகா தொடர்புக் குழு, தெலுக் கெமாங் தொகுதி ம இ காவின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்த நெகிரி செம்பிலான் மாநில நிலையிலான ஒற்றுமைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலம் தேசிய முன்னணியின் கோட்டையாகும். இந்த மாநிலத்தில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர்கள் தோல்வியுற்றதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், கட்சி உறுப்பினர்களின் கீழறுப்பு நடவடிக்கைகளை இனி கட்சி ஏற்றுக் கொள்ளாது என டாக்டர் சுப்ரா உறுதியாகக் கூறினார்.

மேலும் பேசுகையில், மஇகா இந்தியர்களின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு கட்சியாகும். இந்திய சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்க்காலத்தை கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சமுதாயம் வளர்ச்சிக் காணும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக டத்தோஸ்ரீ கூறினார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்தியர்கள் கடந்த கால தவற்றை மீண்டும் செய்யாமல், தங்களுக்கு மேம்பாட்டை கொண்டு வரக்கூடியவரை தேர்வுச் செய்ய வேண்டும் எனவும் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ம இ கா உயர் மட்டத் தலைவர்களுடன், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

11 எஸ்.ஐ.டி.எப் சேவை மையங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன

11 எஸ்.ஐ.டி.எப் சேவை மையங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன

February 09, 2018

இந்நாட்டில் இந்தியர்கள் அதிகம் வாழும் மேலும் பத்து (10) இடங்களில் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கை பிரிவின் எஸ்.ஐ.டி.எப். (SITF) சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தற்போது நாடு முழுவதும் 11 இடங்களில் எஸ்.ஐ.டி.எப் சேவை மையங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை 8 பிப்ரவரி 2018-ஆம் நாள் காராக், தாமான் செந்தோசாவில் பகாங் மாநில எஸ்.ஐ.டி.எப் சேவை மையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

 

பகாங் பெரிய மாநிலம் என்பதால் இம்மாநிலத்தில் மேலுமொரு சேவை மையத்தை அமைப்பது குறித்து தாம் பரிசீலித்து வருவதாக டாக்டர் சுப்ரா  மேலும் கூறினார்.

மேலும் பேசிய அவர், ம இ காவின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த 11 சேவை மையங்களின் வழி பெறப்பட்ட சுமார் 1,170 புகார்களில் ஏறத்தாழ 60 விழுக்காடு தீர்வுக் காணப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் சமூகவியல், கல்வி, பொருளாதாரம், வறுமை, வீட்டுடமை, அடையாள ஆவணம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் இந்தியர்கள் அதிகம் வாழும் 11 இடங்களில் ஓரிட சேவை மையங்களை அமைத்துள்ளது என டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றவர்கள் இந்த மையங்களுக்குச் செல்வதன் மூலம் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண முடியும் அல்லது தீர்வுக் காண்பதற்கு தேவையான வழிவகையினை காண முடியும் என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, சேவை மையத் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அரசாங்கம் மேற்கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும் வெற்றிப் பெற வேண்டுமானால், கட்சி உறுப்பினர்களோடு, இந்திய சமுதாயமும் அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்            ம இ கா உயர் மட்டத் தலைவர்களுடன், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

“சமுதாய நோக்கத்தோடு வாக்களியுங்கள் – சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராதீர்கள்”

“சமுதாய நோக்கத்தோடு வாக்களியுங்கள் – சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராதீர்கள்”

February 03, 2018

இந்நாட்டிலுள்ள ஏறத்தாழ 22 லட்சம் இந்தியர்களில் 46 விழுக்காட்டினர் ம இ காவில் உறுப்பினர்களாக இருப்பதால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர்கள் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை ம இ கா உறுதிச் செய்யும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் உறுதியளித்துள்ளார்.

 

மேலும், இந்தியர்களின் நலனை தேசிய முன்னணி அரசாங்கத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதால் ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களை அவசியம் தேர்வுச் செய்ய வேண்டும் எனவும் டாக்டர் சுப்ரா மீண்டும் கேட்டுக் கொண்டார்.

 

 

நாடு முழுவதும் இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சுமூகமாக தீர்வுக் காணப்பட்டு வருவதால் இந்தியர்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத்தேர்தலில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் சமுதாய நோக்கில் முடிவெடுக்க வேண்டும் என டாக்டர் சுப்ரா மேலும் குறிப்பிட்டார்.

பேராக், ஊத்தான் மெலிந்தாங்கில் இந்திய சன்மார்க்க சங்க மண்டபத்தில் பேரா மாநில ம இ கா தொடர்புக் குழுவும், பாகான் டத்தோ தேசிய முன்னணி நாடாளுமன்ற தொகுதியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பேரா மாநில நிலையிலான ஒற்றுமை பொங்கல் விழாவில் இன்று சனிக்கிழமை (3 பிப்ரவரி 2018) கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் இம்மண்டபத்தில் ஈராயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்றாக, திரளாக, ஒற்றுமையாக அதிக எண்ணிக்கையில் கூடியிருப்பது தமக்கு மேலும் உற்சாகமளிப்பதாகவும், ஒற்றுமைப் பொங்கலுக்கு மகுடம் வைப்பது போல உள்ளது என டாக்டர் சுப்ரா மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இடை இடையே இடம் பெற்ற இந்திய பாரம்பரிய ஆடல் பாடல் காட்சிகள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தன. அதிர்ஷ்ட குலுக்கில் ஐவருக்கு மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இளங்கோ உட்பட ம இ கா உயர் மட்டத் தலைவர்களுடன், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

 

மாணவி வசந்தப்பிரியாவுக்கு டாக்டர் சுப்ரா இறுதி மரியாதை

மாணவி வசந்தப்பிரியாவுக்கு டாக்டர் சுப்ரா இறுதி மரியாதை

February 02, 2018

நேற்று வியாழக்கிழமை (1 பிப்ரவரி 2018) பினாங்கு மாநிலத்திற்கு வருகை தந்த டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மாணவி வசந்தப் பிரியா மரணத்தைத் தழுவினார் என்ற துயரச் செய்தி கேட்டு, உடனடியாக அவரது இல்லம் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியதோடு, வசந்தப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு கைத்தொலைபேசி காணாமல் போன விவகாரத்தில் மன சஞ்சலம் கொண்ட வசந்தப்பிரியா தற்கொலைக்கு முயற்சி செய்து பின்னர் காப்பாற்றப்பட்டார். எனினும் அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்காக அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. வசந்தப்பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் வசந்தப்பிரியாவின் தந்தை முனியாண்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த டாக்டர் சுப்ரா தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, நிலைமையையும் நேரில் கேட்டறிந்தார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று வியாழக்கிழமை வசந்தப்பிரியா காலமானார். தகவல் அறிந்ததும், உடனடியாக டாக்டர் சுப்ரா இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வசந்தப் பிரியா இல்லம் விரைந்தார்.

“இந்த சோக சம்பவம் என்னையும் பொதுமக்களையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கவே கூடாது” என்றும் டாக்டர் சுப்ரா கருத்து தெரிவித்தார்.

 

 

Dr Subra memberi penghormatan terakhir kepada mendiang adik Vasanthapriya

Dr Subra memberi penghormatan terakhir kepada mendiang adik Vasanthapriya

February 02, 2018

Suasana sedih dan hiba menyelubungi ketika Datuk Seri Dr S. Subramaniam memberi penghormatan terakhir kepada mendiang adik Vasanthapriya pada hari Khamis 01 Februari 2018. Beliau turut menyampaikan ucapan takziah kepada ayah mendiang Encik Muniandy serta keluarganya. Katanya “ ianya merupakan satu peristiwa yang amat menyedihkan dan tidak sepatutunya berlaku”.