சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்த து இனக் கலவரமல்ல!

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்த து இனக் கலவரமல்ல!

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்தது இனக் கலவரமல்ல!
தூண்டி விட்டவர்களை காவல்துறை அடையாளம் காட்ட வேண்டும்!
– தான்ஸ்ரீ விக்னேஷ்வரன்

சுபாங் ஜெயா, நவ.26-

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்தது இன கலவரமல்ல. மாறாக ஆட்களை ஏவி விட்டிருக்கிறார்கள் என்பதால் தாக்குதல்காரர்களுக்கு பின்னனியில் இருப்பவர்களை காவல் துறை அடையாளம் காட்ட வேண்டும் என்று ம இ கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் கூறினார்.
ஆலய நிலவரங்களை பார்க்கும் போது இந்த தாக்குதலில் மேம்பாட்டு நிறுவனத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் காவல் துறை மூடி மறைக்காமல் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆலயத்திற்கு நேரில் வந்த மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.Image result for seafield mariamman temple

இந்த விவகாரம் தொடர்பில் சுபாங் ஜெயா காவல்துறை முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆகையால் இதுகுறித்து புக்கிட் அமான் காவல் துறை திறந்த மனப்போக்குடன் விசாரணை நடத்த வேண்டும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இன்று நவம்பர் 26 அதிகாலை நடந்த தாக்குதலில் 200 அந்நிய குண்டர்கள் ஆலயத்தை முற்றுகையிட்டு அங்கிருந்தவர்களை தாக்கினர். மேலும் 18க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஒரு மணி நேரத்தில் இந்து மக்கள் கவனத்தை ஈர்த்ததால் குண்டர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். எனினும் 30க்கும் மேற்பட்ட அடையாள அட்டை, வாகன லைசென்ஸ் கைப்பற்றப்பட்டன.

 

இந்த ஆலய விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் காவல் துறை விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

Image result for seafield mariamman templeஆகையால், இந்த சம்பவம் குறித்து புக்கிட் அமான் காவல் துறை புலன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.
ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மஇகா சார்பில் 20 ஆயிரம் வெள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மஇகா அனுப்பும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அறிவிப்பு

கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மஇகா அனுப்பும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அறிவிப்பு

கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மஇகா அனுப்பும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அறிவிப்ப

கோலாலம்பூர், ஆகஸ்டு 18-

கேரள மாநிலத்தில் சில நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஇகா நிவாரணப் பொருட்களை அனுப்புமென அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக தெரிவித்த டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் மஇகா தலைமையகத்தில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டிலும் மோசமான ்வெள்ளம் இதுவாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் வீடுகள் பெயர்த்துக் கொண்டு அடித்துச் செல்லப்பட்டன.

வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரையில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். கேரள மக்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் மஇகா நிவாரணப் பொருட்களை விரைவில் அனுப்பவிருப்பதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்த நிவாரணப் பொருட்கள் மஇகா தலைமையகத்தில் சேகரித்து வைக்கப்படும். அதேநேரத்தில் மாநில மஇகா, தொகுதி அலுவலகங்களிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படும். துணிமணிகள், உணவுப் பொருட்கள், பால்மாவு, அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்க நினைக்கும் மக்கள் நேரடியாக மஇகா தலைமையகத்திற்கு வந்து வழங்கலாம். அதேநேரத்தில் நாடு தழுவிய நிலையில் மாநில, தொகுதி மஇகா அலுவலகங்களிலும் வழங்கலாம் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

இந்த நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் இளைஞர், மகளிர் அணியினர் ஈடுபடுவார்கள். இப்பணிகளுக்கு ம இ கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, இளைஞர் பகுதி தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் பரமசிவன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ஆகையால், மனிதாபிமான அடிப்படையில் கேரள மக்கள் துயரத்தில் நாமும் பங்கு கொண்டு உதவுவோம் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு டத்தோ சிவராஜ் – 019- 3060, டத்தோ மோகனா – 016 3035, புனிதன்- 017 272 4033, விக்னேஷ்வரன் பாபுஜி – 012 2626216, புத்ரா தலைவர் யுவராஜ் – 017- 3775592, பத்ரி தலைவி – 012- 297 9479

மஇகாவை யாரும் அழித்து விட முடியாது

மஇகாவை யாரும் அழித்து விட முடியாது

மஇகாவை யாரும் அழித்து விட முடியாது

 

ம இகாவின் 72-வது பொதுப் பேரவையில், இந்திய சமுதாயதின் தாய்க்கட்சியாக விளங்கும்  மஇகாவை ஒருபோதும் எவராலும் அழித்து விட முடியாது என தனதுரையில் தேசிய தலைவர் மாண்புமிகு செனட்டர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார். மஇகா பல சாதனைகளையும் சோதனைகளையும் கண்ட அனுபவமிக்க கட்சியென்பது வரலாற்று உண்மையாகும். அப்படியிருக்க இக்கட்சியை அழிக்க நினைப்பவர்களின் கனவு “விழலுக்கு இரைத்த நீர் போல” தான் என்று சூழுரைத்தார். 

14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ம.இ.காவிற்கு தேவை ஒரு புதியப் பரிணாமம். ஆதலால் கட்சியில் உறுமாற்றத்திற்கும் உறுப்பினர்களின் வளர்ச்சிக்கும் மட்டுமே இனி நாங்கள்  செயல்படுவோம் என தெரிவித்தார்பாகவே கட்சி உறுப்பினர்கள் யாவரும் சகோதரதுவத்தை வழுபடுத்தி கட்சியின் உறுமாற்றத்திற்கும் சுய முன்னேற்றதிற்கும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

 

 

மஇகா கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும்

மஇகா கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும்

மஇகா கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும்.

மஇகா இனி கட்சி உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே பாடுபடும். இத்தருணத்தில் இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நான்கு அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியர்களின் பிரச்னை என்றால் உடனே மஇகாவை கைகாட்டி விட்டு ஒளிந்து கொள்ளும் கலாசாரம் இனியும் இருக்கக்கூடாது.

இந்தியர்களின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நான்கு அமைச்சர்கள் அவர்களது பிரச்னைகளைக் களைய முனைப்புக் காட்ட வேண்டும். இனி வரும் 5 ஆண்டு காலத்தில் மஇகாவை எப்படி மேம்படுத்துவது, அதே நேரத்தில் கட்சி உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எம்.மாதிரியான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்பது குறித்து மட்டுமே நாங்கள் செயல்படுவோம் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

மஇகா உயர்மட்டத் தலைவர் தேர்தல், மத்திய செயலவை மற்றும் மாநில பொறுப்புக்களில் வெற்றி பெற்றவர்களில் யார் 15ஆவது பொது தேர்தலுக்கான வேட்பாளர் என்பது இப்போது முடிவு செய்யப்படும். கடந்த காலங்களில் கட்சியின் தலைவர் வேட்பாளரை முடிவு செய்தார். ஆனால் எனது தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரின் ஆலோசனைப் படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ த.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ முருகையா, 21 மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில தலைவர்கள் என அனைவரிடமும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த கலந்துரையாடல்கள் கருத்து பரிமாற்றம் செய்யப்படும். இப்படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவரின் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக மஇகா தேர்தல் வாக்கெடுப்பு நீண்டநேரம் நீடித்தது குறித்து கருத்துரைத்த அவர் 2013ஆம் ஆண்டு கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது. அம்மாதிரியான ஒரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என்பதற்காக முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார். மனநிறைவு கொள்ளாதவர்கள் நேரடியாக கட்சியின் தலைமைத்துவத்தை அணுகி தேர்தல் நடவடிக்கை அதிகாரி டான்ஸ்ரீ ராஜூவிடம் விளக்கம் பெறலாம்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டான்ஸ்ரீ ராமசாமி கள்ள வாக்குகள் செலுத்தப்பட்டதாக புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அதில் எந்த தொகுதியென குறிப்பிடப்படவில்லை. மஇகா தேர்தல் நடைமுறையை பொறுத்தவரை கள்ள ஓட்டுக்கு வாய்ப்பு இல்லையென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கம் அளித்தார். 58 விழுக்காட்டு பேர் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.

குறுகிய காலத்திற்குள் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளார்கள். கட்சியின் நடைமுறை மாற்றம் நம்மை வலுப்படுத்தும் என்பதற்கு இது நல்ல உதாரணம். உருமாற்றத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோம். அந்த பயணம் கடுமையானதாக இருக்கும். அதில் நம்மோடு இணைந்து கட்சி உறுப்பினர்களும் பயணமாக தயாராக வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்

http://www.anegun.com/?p=26284

எனது வாக்கு டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

எனது வாக்கு டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

எனது ஆதரவு டத்தோஶ்ரீ மு.சரவணனுக்குத்தான்.

மஇகா துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் தமது வாக்கு என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், மஇகா தேர்தலில் போட்டியிட பலர் முன்வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கட்சியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் விசுவாத்தை இது காட்டுகின்றது என மஇகா தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

டான்ஶ்ரீ ராமசாமி, எனது உறவினர். குறிப்பாக மலேசியாவில் முதன்மை தொழிலதிபர்களில் அவரும் ஒருவர். அவர் மஇகாவின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது கட்சிக்கு மிகப் பெரிய மதிப்பை உண்டாக்கியுள்ளது. யார் கட்சியின் துணைத் தலைவராக வர வேண்டுமென கட்சியின் உறுப்பினர்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் எனது வாக்கு டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் என அவர் கூறினார்.

இப்போது நாம் எதிர்க்கட்சி. இறுப்பினும் 10 பேர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். அதில் டத்தோ டி மோகன் உட்பட பல இளைஞர்கள் போட்டியிடுகின்றார்கள். அதில் டத்தோ சிவராஜ், ஜோகூர் ரவி, டத்தோ அசோஜன், ராமலிங்கம் என பலர் களத்தில் குதித்துள்ளார்கள். இது ஆரோக்கியமான தேர்தலாக அமையுமென டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய செயலவைக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் கட்சிக்காக பாடுபடக்கூடியவர்களுக்கு தாம் நேரடியாக ஆதரவு வழங்குவேன் என்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.