இந்திரா காந்தியை நடுத்தெருவில் விட்டு விட்டீர்கள்! உங்கள் அரசியல் கபட நாடகத்தை நிறுத்துங்கள்! சிவநேசனுக்கு ம.இ.கா குணாளன் சாட்டை

இந்திரா காந்தியை நடுத்தெருவில் விட்டு விட்டீர்கள்! உங்கள் அரசியல் கபட நாடகத்தை நிறுத்துங்கள்! சிவநேசனுக்கு ம.இ.கா குணாளன் சாட்டை

ம.இ.கா பாஸ் கட்சியுடன் மேற்கொண்டுள்ள கூட்டணி தொடர்பில் ஜனநாயக செயல்கட்சித் தலைவரும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசனின் அறிக்கை “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது என்று ம.இ.கா தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் சாடியுள்ளார்.

ம.இ.காவின் அரசியல் எதிர்காலத்திற்கும் இன்னும் ம.இ.காவை நம்பி வாழும் மலேசிய இந்தியர்களுக்கும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இடம்பெற வலுவான கட்சியாக ம.இ.காவை உருமாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பாஸ் கட்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நட்புறவு நடவடிக்கை என்று சிப்பாங. ம.இ.கா தொகுதித் தலைவருமான வே.குணாளன் தெளிவுபடுத்தினார்.

தொடர்புடைய படம்இதனை ஏற்றுக் கொள்ள முடியாத சிவநேசன் புலம்புவது வேடிக்கையாக உள்ளது. சிவநேசன் தொடர்ந்து இந்திய சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் நாடகம் நடந்த வேண்டாம். சிவநேசன் அவர்களே, பாஸ் கட்சியுடன் முதலில் கட்டிப்புரண்டது யார்? பாஸ் கட்சியுடன் ம.இ.கா ஒரு சகாப்தத்தை  உருவாக்கிக் கொண்டுள்ளது. இதன்வழி அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.காவின் வேட்பாளர்கள் முதன்மையாக வெற்றி பெற்று விடுவார்கள். இப்படி செய்வதன் வழி ம.இ.கா ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் ஆதரவைப் பெற்றுவிடும் என்ற பயமும் பொறாமையும் உங்கள் கண்களில் தெரிகின்றது என்றார் குணாளன்.

கடந்த 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் கூட்டணியில் இணைந்திருந்த பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் சட்டவிதி 355  கீழ் தனிநபராக ஹுடுட் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்த போது, அவருடன் கூட்டு சேர்ந்த இன்றைய அமனா கட்சியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் பாஸ் கட்சித் தலைவர்கள் என்ற கூற்றை மறந்து அல்லது மறைத்து சிவநேசன் கூறுவது வேதனையாக உள்ளது. அன்று பாஸ் கட்சிக்கு துணை போன அமனா கட்சித் தலைவருடன் கூட்டு சேர்ந்து அரசியல் நாடகம் நடத்துவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

malaysia indra gandhi case க்கான பட முடிவுஅது எப்படி சிவநேசன் அவர்களே, உங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயம்?  இதுபோன்ற துப்புக் கெட்ட அரசியல் தேவைதானா? ம.இ.கா மீது சவாரி செய்து உங்கள் தன்மானமற்ற அரசியல் நாடகத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். திருமதி இந்திரா காந்தியின் பிள்ளைகள் கணவரால் மதம் மாற்றப்பட்ட விவகாரம் நீங்கள் பாஸ் கட்சியுடன் உருண்டு பிரண்ட காலத்தில் உருவான விவகாரம். இந்திரா காந்தி கணவர் கிளந்தான் மாநிலத்தில் இருந்தார் என கூறப்பட்டது. நீங்கள் ஏன் பாஸ் கட்சித் தலைவரை தட்டிக் கேட்கவில்லை?

நீங்களும் ஜசெகவின் முன்னோடித் தலைவர்களும் சுயநல அரசியல் லாபத்திற்காக இந்திரா காந்தி விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டு இன்று நீங்கள் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் குலசேகரன் மத்திய அமைச்சராகவும் இருக்கிறீர்கள். ஆனால், இந்திரா காந்தியை நடுத்தெருவில் விட்டு ஒன்று செய்ய முடியாது என்று வாய் கூசாமல் கூறி இருவரும் கைவிரிந்து விட்டீர்கள். ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு அல்வா கொடுத்து விட்டதை மறந்து விடாதீர்கள்.

ம.இ.காவிற்கு என்று ஒரு கொள்கை இருக்கின்றது. உங்களைப் போல் வெறும் அரசியல் லாபத்திற்காக தன்மானத்தை அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் சுயநலத்திற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட வெற்று வாக்குறுதிகள் காற்றில் பறந்து அரசியல் சாயம் வெளுத்துக் கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள் என்று வே.குணாளன் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் திருமதி இந்திரா காந்தி கணவருக்குக்கு எதிராக  தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.  அவர் கிளந்தானில் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் ஏன் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை? ஆட்சியைப் பிடித்து ஓராண்டு காலம் நிறைவடையப் போகும் நிலையில் அதிகாரம் இருந்தும் ஏன் இந்திரா காந்தி கணவரை கைது செய்ய முடியவில்லை? ஆனால், இந்தோனேசியாவில் மறைந்திருந்த தேசிய முன்னணி ஜமாலை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. இதில் உங்கள் அரசியல் நாடக அரங்கேற்றம் எல்லோருக்கும் தெரிகின்றது.

சிவநேசன் அவர்களே, நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் இன்னும் எத்தனை நாளைக்கு ம.இ.காவை சாடி உங்கள் சுயநல அரசியல் நாடகம் நடத்தப் போகின்றீர்கள்? மலேசிய இந்தியர்கள் மத்தியில் இனியும் உங்களது “மக்களை  முட்டாளாக்கும்” அரசியல் நாடகம் எடுபடாது. ஆகவே, மற்றவர்களை சாடி அரசியல் பிழைப்பு நடத்தும் உங்களது போக்கை மாற்றி, பதவியில் இருக்கும் காலத்தில் உருப்படியாக சமூகத்திற்கு ஏதாவது நல்லதை செய்யப் பாருங்கள் என்று வே.குணாளன் ஆலோசனை கூறினார்.

http://www.desam4u.com/2019/03/blog-post_43.html?m=1
மகாதீர் உடன் கைகோர்ப்பது நியாயம்! பாஸுடன் இணைவது தவறா? டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

மகாதீர் உடன் கைகோர்ப்பது நியாயம்! பாஸுடன் இணைவது தவறா? டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

பாஸ் கட்சியுடன் மலேசிய இந்திய காங்கிரஸ் இணைந்து செயல்படும் என கூறிய அடுத்த கணமே சிலர் சமூக தளங்களில் இது குறித்து கேள்வி எழுப்புகின்றார்கள். தற்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் துன் டாக்டர் மகாதீர் உடன் இணைந்து பணியாற்றுவதில் நியாயம் இருக்கும் பட்சத்தில், பாஸ் கட்சியுடன் மலேசிய இந்திய காங்கிரஸ் இணைவதில் என்ன தவறு உள்ளது என அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சியாக இருந்து பழக்கப்பட்ட பாஸிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த புரிந்துணர்வு என்பது எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காது என அவர் மேலும் கூறினார்.

பாஸ் கட்சி குறித்து இது வரையில் நாங்கள் தவறான சிந்தனையை தான் கொண்டிருந்தோம். ஆனால் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் மாநிலங்களில் எந்த ஆலயமும் உடைக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதோடு எந்த ஒரு சூழ்நிலையிலும் இதர இனங்களின் உரிமைகளை பறிக்க மாட்டோம் என்பதில் பாஸ் உறுதியாக இருக்கின்றது. அந்த வெளிப்படையான கூற்றுதான் இந்த நட்பு உழவிற்கு முதன்மை காரணம் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாஸ் உடன் இணைந்து செயல்பட்டவர்கள் இப்போது அவர்களை குறை கூறுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எது குறித்தும் வாய் திறக்காதவர்கள் இப்போது பேசுகிறார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை பாஸ் கட்சி சிறந்த முறையில் செயல்படுகிறது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரசின் தலைமையகத்திற்கு பாஸ் கட்சியின் தேசிய தலைவர் ஹடி அவாங் வருகை புரிந்து இருப்பது வரலாற்று நிகழ்வாகும். மஇகா இதுவரையில் இந்திய சமுதாயத்திற்காக எம்மாதிரியான நலத்திட்டங்களையும் சேவைகளையும் முன்னெடுத்தது என்பது குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டது மஇகாதான் என்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

எங்களுடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டனர். கிளாந்தான் திரங்கானு ஆகிய இரண்டு மாநில ஆட்சி களைக் கொண்டிருக்கும் பாஸ் அங்கு இந்தியர்களின் பிரச்சினையை கவனிப்பதற்கு ம இ கா வின் பிரதிநிதிகளையும் நியமிப்பதற்கு தயாராக இருப்பதாக ஹடி அவாங் கூறினார்.

இது எங்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி என்றாலும் இதை எதிர்பார்த்து பாசுடன் நாங்கள் இணைந்து செயல்பட வில்லை என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார். கிளாந்தான் திரங்கானு ஆகிய மாநிலங்களில் இந்திய சமுதாயத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினையை மாநில அரசின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளும் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இன்னமும் எங்களை குறை கூறியே அரசியல் நடத்துகிறார்கள். மக்களின் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும். எங்கள் கட்சியையும் எங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். பாஸ் கட்சியுடன் இணைந்து இருப்பது நிச்சயம் மஇகாவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று மஇகாவுடன் பாஸ் இணக்கமான கருத்துப் பரிமாற்றம்!

இன்று மஇகாவுடன் பாஸ் இணக்கமான கருத்துப் பரிமாற்றம்!

ம இ காவும் பாஸும் இணைந்து அடுத்த கட்ட அரசியலை எப்படி எடுத்துச் செல்லலாம் என்றளவிலான கருத்து பரிமாற்றமொன்று இன்று ம இ கா தலைமையத்தில் ம இ கா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ துவான் குரு ஹாஜி ஹாடி ஹாவங் கும் நடத்தினர் பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பில் ம இ கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், ம இ கா உதவித்தலைவர்களான டத்தோ டி. மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன்

டத்தோ முருகையா உள்ளிட்ட ம இ கா முன்னணித் தலைவர்களுடன் மத்திய செயலவை உறுப்பினர்களும் ம இ கா தொகுதி காங்கிரசு தலைவர்களும் பரலாக கணிசமானயளவு கலந்து கொண்டனர்.

அதேபோன்று பாஸின் பல முன்னணித்தலைவர்களும் கொள்கை ரீதியிலான இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.

வரலாற்றுப் பூர்வமான இந்த சந்திப்பில் பாஸ் குறித்து எழுந்துள்ள தப்பும் தவறுமாக   கருத்துக்களுக்கு விளக்கமளிப்பப்பட்டது. இந்திய  சமூகத்தின் பிரச்சனைகள், அந்த சமூகம் எதிர்நோக்கும் எதிர் வினைகள் குறித்தும் பொதுவான அரசியல் பார்வையோடு அணுக வேண்டியது குறித்தும் அதேவேளை தேசிய அரசியலில் எத்தகைய முன்னெடுப்போடு பாஸூம்,- ம இ காவும் இணைந்து செயல்பட வேண்டுமென்ற கருத்திணக்கமும் இந்த பேச்சு வார்த்தையில் தீர்வுக்காணப் பட்டதென்றும் தெரிகிறது. ம இ கா அம்னோ, பாஸ் இவற்றுடன் மசீசவின் இணக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜசெக ஏற்கனவே பாஸுடன் வைத்துக் கொண்ட உறவும, இப்போது பாஸுடன் அக்கட்சி கொண்டுள்ள வேறுபாட்டால் மதவாதம் குறித்து விமர்சிப்பதும் அதை எத்தகைய அடிப்படையில் மக்கள் தவறாகக் கருத இடமளிக்கிறதென்றும் கருத்துக்களும் விவாதப் பொருளாகிய தென்றும் தெரிகிறது.

இரண்டு மணி்நேரத்திற்குப் பின்னர்  நிருபர்களிடமும் ம இ காதொகுத்தலைவர்களிடமும் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்திய சமூகத்தின் அடிப்படை உரிமையை அரசியலாக்க வேண்டாம்! வித்யானந்தன் வலியுறுத்து

இந்திய சமூகத்தின் அடிப்படை உரிமையை அரசியலாக்க வேண்டாம்! வித்யானந்தன் வலியுறுத்து

ஜொகூர் பாரு மாவட்டத்தில் முக்கிம் சுங்கை திராமில் இந்திய சமூகத்தினர் ஈமச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட 1.09 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் நிராகரித்திருப்பதை ஜோகூர் மாநில ம.இ.கா தலைவர் இரா வித்யானந்தன் சாடினார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்த நிலம் அடையாளம் காணப்பட்டு இதற்கான ஒதுக்கீடும் பாசீர்கூடாங் நகராண்மைக் கழகத்திற்கு வழங்கப்பட்டது .நவீன அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதற்கும் இந்திய சமூகத்தினரின் ஈமச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருத்தமான இடமாக இது அடையாளம் காணப்பட்டது.

தற்போது இந்த நிலம் நிராகரிக்கப்பட்டது குறித்து மாநில அரசாங்கம் தெளிவான விளக்கம் வழங்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். ஒதுக்கப்பட்ட நிலம் மற்றும் அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடும் பாசீர்கூடாங் நகராண்மைக் கழகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது.அப்படி இருக்கையில் இந்த நிலத்தை நிராகரித்தது எந்த வகையில் நியாயம் .?

ஜொகூர் பாரு வட்டாரத்தில் அதிகமான மக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்திய சமுகத்தை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதி சடங்கை முறையாகவும் கௌரவமாகவும் செய்வதற்கு பொருத்தமான இடம் இல்லாமல் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஜோகூர் அரசாங்கம் வெளிப்படையான விளக்கத்தை இந்திய சமுகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என வித்தியானந்தன் கேட்டுக் கொண்டார். இந்திய சமூகத்தின் நியாயமான சமய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஈமச்சடங்கு நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான வித்யானந்தன் வினவினார்.

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவு தொடரும்! டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவு தொடரும்! டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் மார்ச் 19-

மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடரும் என மேலவை தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறான சவால்கள் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் நிலையிலும் நட்புறவு என்பது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழமை காலை சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் தன் சுவான் ஜின்னுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் பல தரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் அதைக் களைவது இரண்டு நாடுகளின்அரசாங்கத்தின் கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இரண்டு நாடுகளில் இருக்கும் தலைவர்கள் நட்புறவைப் பேணுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகருடன் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவை தொடர்ந்து பேணி காப்பது தான் நமது நோக்கம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

MIC cabar PH tunjuk bukti pembinaan lapan sekolah Tamil baru

MIC cabar PH tunjuk bukti pembinaan lapan sekolah Tamil baru

MIC hari ini mencabar Ahli Parlimen Jelutong RSN Rayer supaya mengemukakan bukti yang menunjukkan bahawa kerajaan Pakatan Harapan telah membina lapan sekolah Tamil baru di Pulau Pinang.

Ketua penerangannya, V Gunalan berkata Rayer perlu memohon maaf sekiranya tidak dapat membuktikan bahawa PH telah membina lapan sekolah Tamil baru seperti yang didakwanya di Dewan Rakyat, semalam.

“Kenyataan Rayer yang berkata bahawa PH membina lapan sekolah Tamil baru di Pulau Pinang adalah sangat lucu dan juga satu cubaan mengelirukan rakyat.

“Setahu kami, sekolah-sekolah Tamil sedang bertungkus lumus dengan KPM (Kementerian Pendidikan Malaysia) untuk mendapatkan peruntukan yang dijanji semasa pemerintahan BN.

“Ini pula, kata bina lapan sekolah baru sedangkan PH memerintah negara tak sampai satu tahun,” katanya kepada Malaysiakini.

MIC turut meminta Rayer supaya menjelaskan lokasi sekolah-sekolah berkenaan berserta dengan nama-nama sekolah tersebut sekali.

“Selepas BN dikalahkan pada PRU14 yang lalu, jumlah sekolah Tamil di Pulau Pinang adalah 28 sahaja. Kalau mengikut kenyataan Rayer, kini perlu adanya 36 sekolahTaml. Harap Rayer dapat kemukan buktinya.

“Sekiranya gagal, maka beliau perlu meminta maaf secara terbuka kerana menipu dan memberikan fakta yang mengelirukan rakyat,” kata Gunalan. Untuk rekod, dalam sesi parlimen semalam, Rayer berkata kerajaan PH membina lapan sekolah baru di Pulau Pinang.

“Di Pulau Pinang, Pakatan Harapan telah membina sekolah Tamil, lima atau enam sekolah telah dibina. Jangan putar belit fakta,” kata Rayer ketika mencelah soalan tambahan M Saravanan (BN-Tapah) yang bertanya apakah status sekolah menengah Tamil yang dijanjikan oleh PH dalam manifesto mereka.

Rayer bangun sekali lagi menyatakan bahawa PH membina lebih kurang lapan sekolah Tamil.