“இந்தியர்களுக்கு 7 சதவீத குத்தகை வாய்ப்பு” மஇகா தொடர்ந்து வலியுறுத்தும்

“இந்தியர்களுக்கு 7 சதவீத குத்தகை வாய்ப்பு” மஇகா தொடர்ந்து வலியுறுத்தும்

December 03, 2017

மலேசிய இந்திய தொழில் முனைவர்கள் அரசாங்க குத்தகைகளில் குறைந்தது ஏழு விழுக்காட்டைப் பெறுவதை உறுதிச் செய்ய ம இ கா அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவரும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நாட்டின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரைவு தொடர்பாக மலேசிய இந்திய சமுதாய கோரிக்கைகள் குறித்து தாம் பிரதமருடன் நடத்திய சிறப்புச் சந்திப்பின் போது இதர விவகாரங்களோடு இவ்விவகாரம் குறித்தும் பேசியதாகவும், குத்தகைகள் வழங்குவதில் அரசாங்கத்தின் உள்ள சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக பிரதமர் இதுதொடர்பான அறிவிப்பை செய்ய இயலாமல் போனது என சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா தெளிவுப் படுத்தினார்.

இருப்பினும், நிதியமைச்சு சிறப்புக் குழுவை அமைத்து இந்திய தொழில் முனைவர்களுக்கு குத்தகைகள் வழங்குவது குறித்து ஆராயும்படி தாம் நிதியமைச்சருமான பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாக டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.

நேற்று சனிக்கிழமை (02 டிசம்பர் 2017) இன்று, கோலாலம்பூர் மெஜஸ்டிக் தங்கும் விடுதியில் 2017 ஆம் ஆண்டுக்கான பெர்டானா இந்திய இளம் தொழில் முனைவர் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது டாக்டர் சுப்ரா இதனை தெரிவித்தார்.

 

இந்திய தொழில் முனைவர்கள் பற்றி பேசிய அமைச்சர், உலகளாவிய நிலையில் தற்போது தொழில் துறை பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள தொழில் முனைவர்கள் அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

12 வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலருக்கு பெர்டானா இளம் தொழில் முனைவர் விருதுகள் வழங்கப்பட்டன. டாக்டர் சுப்ரா இந்த விருதுகளை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிரமுகர்கள், இந்திய தொழில் முனைவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

Dr Subra melancarkan buku “The Melaka Chitties”

Dr Subra melancarkan buku “The Melaka Chitties”

November 27, 2017

Datuk Seri Dr S Subramaniam Menteri Kesihatan merangkap Presiden MIC telah menyempurnakan Majlis Pelancaran Buku ” The Melaka Chitties” di Kampung Chitty, Gajah Berang, Melaka semalam. Buku ‘Melaka Chitties’ yang merupakan hasil kajian mengenai masyarakat Hindu peranakan Melaka oleh Pensyarah Universiti Putra Malaysia, Prof Madya Dr M.Paramasivam dan Pengkaji sejarah, K. Narayanasamy.

 

 

Presiden MIC dalam ucapannya berkata , kewujudan kaum Chetti Lebih 500 Tahun di negara ini adalah asimilasi budaya yang mengambil masa yang panjang dan ia perlu dikekalkan untuk generasi seterusnya kerana ia merupakan harta yang tidak ternilai. Tambah beliau , kaum Chetti perlu sentiasa menangkis pelbagai unsur luar pada masa kini yang boleh mengganggu gugat amalan, tradisi dan budaya masyarakat kaum minoriti itu.

 

Beliau turut menegaskan bahawa lebih banyak penyelidikan terhadap latar belakang dan kehidupan kaum Chetti perlu dilakukan oleh ahli akademik atau pengkaji sejarah agar kumpulan minoriti ini dapat diketengahkan kepada orang awam secara lebih meluas.

 

 

 

 

தமிழ்ப் பள்ளியின் கணினிக்கூடத்திற்கு டாக்டர் சுப்ரா 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை!

தமிழ்ப் பள்ளியின் கணினிக்கூடத்திற்கு டாக்டர் சுப்ரா 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை!

November 25, 2017

கோலாலம்பூர், தேசிய வகை ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கணினிக் டாககூடத்தின் கட்டுமானப் பணிக்கு தாம் 50 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குவதாக ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.


மேலும், இப்பள்ளியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் இவ்வாண்டு இரண்டும் லட்சம் ரிங்கிட்டை ஒதிக்கியுள்ளது. பள்ளி நிர்வாகம் கொடுக்கப்படும் நிதியினை நன்கு திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என டாக்டர் சுப்ரா நினைவுறுத்தினார்.

ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கணினிக்கூடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த போது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இப்புதிய கணினிக் கூடம் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிக்கு பல நல்ல உள்ளங்கள் நன்கொடைகளை வழங்கியுள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட டாக்டர் சுப்ரா, பள்ளி நிர்வாகத்துடன் இந்திய சமுகத்தினர் இணைந்து செயல்பட்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல வகையில் நன்மையடைவர் என நம்பிக்கைத் தெரிவித்தார்.


பின்னர் அமைச்சர் பள்ளி நடவடிக்கைகளுக்கு நன்கொடை திரட்ட சிறப்பாக தயாரிக்கப்பட்ட பிடத்தோன் அட்டையையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மார்கிரேட் ஏசய்யா, பள்ளியின் வாரியத் தலைவர் திரு. இராமகிருஷ்ணன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. பிரபு உட்பட கல்வி இலாகாவின் உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், ம இ கா மற்றும் பொது இயக்கங்களின் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

மலாக்கா மாநில மஇகாவின் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்பு

மலாக்கா மாநில மஇகாவின் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்பு

November 19, 2017

மாநிலம் தோறும் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்புகளை மஇகா நடத்தி வருகிறது. இந்த வரிசையில் மஇகா மலாக்கா மாநிலத்தின் தீபாவளி நல்லெண்ண விருந்து கடந்த வெள்ளிக்கிழமை 17 நவம்பர் 2017 மலாக்காவில் உள்ள ஆயர் குரோவில் நடைபெற்றது.

இந்தத் தீபாவளி விருந்துபசரிப்பில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கலந்து கொள்ள, சிறப்பு விருந்தினராக மலாக்கா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் கலந்து கொண்டார்.

திரளான அளவில், மஇகா கிளை மற்றும் தொகுதித் தலைவர்களும், மத்திய செயலவை உறுப்பினர்களும் இந்த தீபாவளி நல்லெண்ண விருந்தில் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

 

 

President MIC hands out out aid to Penang flood victims

President MIC hands out out aid to Penang flood victims

President MIC hands out out aid to Penang flood victims

Datuk Seri Dr S.Subramaniam, President MIC handed out aid to flood victims at Sri Muniswarar Temple in Prai, on Tuesday 14 November 2017 during his working visit to the state. More than 400 families from Bagan Dalam and Prai received the aid.

Penang was hit by the worst floods ever, which claimed seven lives and displaced more than 5,000 people.

 

 

 

 

 

 

சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் ம இ கா மீண்டும் போட்டியிடும்

சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் ம இ கா மீண்டும் போட்டியிடும்

சுபாங் உடல் ஆரோக்கிய முகாமில் டாக்டர் சுப்ரா!
November 13, 2017

சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் ம இ கா மீண்டும் போட்டியிடும் என்றும் அத்தொகுதியில் போட்டியிட ம இ கா தகுதியுள்ள பல வேட்பாளர்களைக் கொண்டிருப்பதாகவும் ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார். நேற்று, ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) சிலாங்கூர், கோத்தா டாமான்சாராவில் உடல் ஆரோக்கியம் தொடர்பான முகாமை (Kem Nak Sihat) தொடக்கி வைத்தப்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 

 

கடந்தப் பொதுத் தேர்தலில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் ம இ காவின் பிரகாஷ் ராவ் போட்டியிட்டு, பிகேஆர் கட்சியின் சிவராசாவிடம் தோல்விக் கண்டார். இதற்கு முன்னர், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ம இ காவின் சார்பில் போட்டியிட்ட டத்தோ முருகேசனும் பிகேஆர் கட்சியின்  சிவராசாவிடம் தோல்விக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஆரோக்கியம் குறித்து பேசிய அமைச்சர், மலேசியர்களில் பலர் இன்னும் முழுமையான மருத்துவப் பரிசோசனை செய்து கொள்ளாமல் உள்ளனர். இதன் காரணமாகவே பலர் நோயின் தன்மை அதிகரித்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் போது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சுகாதார அமைச்சு இதுபோன்ற மருத்துவ முகாம்களை நடத்துவதாக டாக்டர் சுப்ரா தெளிவுப்படுத்தினார். இன்றைய நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளோடு, பொது மக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.