இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரதமர் நஜிப் சந்திப்பு

இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரதமர் நஜிப் சந்திப்பு

December 19, 2017

இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை காலை வட மாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் உடனிருந்தார்.

 

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட நஜிப், “இலங்கையின் வட காகாணத்துக்கான முதல்வர் மதிப்பிற்குரிய சி.வி.விக்னேஸ்வரனுடன் பயன்மிக்க சந்திப்பை நடத்தினேன். அந்த வட்டாரத்தின் மறுசீரமைப்பு மேம்பாடுகளுக்காகவும், அங்குள்ள தமிழ் சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் ஆதரவு கொடுத்து இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

 

இதற்கிடையில் தனது இலங்கை வருகை வெற்றிபெறக் கடுமையாகப் பாடுபட்ட தனது அரசாங்கக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலே காணும் இந்தப் படத்துடன் பதிவிட்டார். நஜிப்பின் இடது புறத்தில் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா…

பிரதமருடனான தனது இலங்கை வருகை மற்றும் இலங்கை வடமாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட டாக்டர் சுப்ரா, யாழ்ப்பாணம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகளில் மலேசியா எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆராய முதல் கட்டமாக மலேசிய அரசாங்கத்தின் அதிகாரத்துவக் குழு ஒன்றை அனுப்ப பிரதமர் பரிசீலிப்பதாக உறுதி கூறியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார்.

 

 

14-வது பொதுத்தேர்தலுக்கான கேந்திர பயிற்சிப்பட்டறை (RETREAT)

14-வது பொதுத்தேர்தலுக்கான கேந்திர பயிற்சிப்பட்டறை (RETREAT)

December 17, 2017

நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் ம இ கா வேட்பாளர்கள்  வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்யும் நோக்கிலும் நாடு முழுமையிலுள்ள இந்திய வாக்காளர்களின் வாக்குகளை தேசிய முன்னணி ஆதரவாகத் திரட்டும் நோக்கிலும், ம இ கா நேற்று சனிக்கிழமை (16 டிசம்பர் 2017) தேசிய நிலையிலான  14வது பொதுத் தேர்தலுக்கான ஆயுத்தப் பணிகள் தொடர்பான சிறப்புப் பட்டறையை நடத்தியதாக ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

 

சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்புப் பட்டறையில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் சுமார் ஏழு பேர் வீதம் என ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

“நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், தேர்தலை நேர்த்தியான முறையில் எதிர்க்கொள்ளும் வகையில் தேர்தல் நடவடிக்கை அறையை அமைப்பது, வாக்காளர்களை அடையாளம் காண்பது போன்றவை குறித்தும் துல்லிதமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் டாக்டர் சுப்ரா  தெரிவித்தார்.

 

தற்போது ம இ கா, நாடு முழுவதும் இந்திய சமூகத்துடனான உறவுப் பாலம் எனும் தலைப்பிலான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த நிகழ்ச்சிகளின் வழி பெறப்பட்ட மக்கள் கருத்துகளும் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராளர்கள் கூட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்கத்திற்குப் பின்னர் ஆறு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி பட்டறைகளில் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி

7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி

December 17, 2017

பேராக் தலைநகர் ஈப்போவில் உள்ள குனோங் ராப்பாட் தேசிய வகை புதிய தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் முழுமைப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் 2019 ஆம் கல்வி ஆண்டில் இங்குள்ள மாணவர்கள் புதியப் பள்ளியில், புதிய சூழலில், அதிநவீன கற்றல் கற்பித்தல் வசதிகளுடன் கல்வியைக் கற்கும் வாய்ப்பு ஏற்படும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2017) நடைபெற்ற குனோங் ராப்பாட் தேசிய வகை புதிய தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்புதிய தமிழ்பள்ளி குனோங் ராப்பாட் நகர்ப்பகுதியை ஒட்டி சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஏறத்தாழ ஏழு மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படவிருப்பதாக டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் பேசுகையில், “மலேசியாவில் சில இடங்களில் தமிழ்ப் பள்ளிகளை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இப்பள்ளி அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு முன்பு வேறொரு இடம் அடையாளம் காணப்பட்டது. அந்த இடம் தமிழ்ப்பள்ளி அமைப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என பெற்றோர்கள் மறுப்புத் தெரிவித்ததைத் தெடர்ந்து மாற்று இடம் அடையாளம் காணப்பட்டு  இந்து சமய முறைப்படி பூமிப் பூஜையும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

 

“இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் ம இ கா உள்ளது. அதனை நோக்கித்தான் நாங்களும் செயல்படுகின்றோம். எங்களுக்குத் துணையாக சமுதாயமும் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இருக்க வேண்டும். குறைகளை சுட்டிக் காட்டுவது தவறல்ல. ஆனால், தவறான தகவலை மக்களுக்குத் தெரிவிப்பது தவறாகும். எனவே, தமிழ்ப்பத்திரிகைகள் செய்தியினை நடுநிலையாக, நேர்மையாக, தர்மத்துடன், அதிக பொறுப்புடன் வெளியிட முன்வர வேண்டும்” என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேராக் மாநில சபாநாயகர் டத்தோ எஸ். தங்கேஸ்வரி, கல்வி துணையமைச்சர் டத்தோ பி். கமலநாதன், பேராக் மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ வ. இளங்கோ, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. கோகிலவாணி முனியாண்டி, கோப்பெங் தொகுதி ம இ கா தலைவர் திரு. சுப்பிரமணியம் திருப்பதி, உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர், உறுப்பினர்கள், ம இ கா தலைவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

“வாசிப்பு அதிகரித்தால் சிந்தனையில் தெளிவு ஏற்படும்” – டாக்டர் சுப்ரா

“வாசிப்பு அதிகரித்தால் சிந்தனையில் தெளிவு ஏற்படும்” – டாக்டர் சுப்ரா

December 17, 2017

“மலேசிய இந்தியர்கள் அதிகம் வாசிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் தெளிவான சிந்தனையோடு முடிவெடுக்க முடியும்” என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பேராக், புந்தோங்கில் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் புதிய கட்டடத்தைக் கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 15-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் போது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் போன்ற அமைப்புகள் இந்தியர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதே வேளையில், அவர்கள் புதிய படைப்பாளர்களையும் அடையாளங் கண்டு அவர்களை எழுத்துத் துறையில் ஊக்குவிக்க வேண்டும் என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் இப்புதிய கட்டடத்திற்கு இன்னும் கடன் இருப்பதாக அதன் தலைவர் சற்று முன்னர் தெரிவித்தார், அதற்காக தாம் 20 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குவதாக டாக்டர் சுப்ரா அறிவித்தார்.

 

முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பேராக் மாநில ம.இ.கா. தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ வ. இளங்கோ, ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்ற கட்டடக் குழுத் தலைவர் அருள் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

“வாசிப்பு அதிகரித்தால் சிந்தனையில் தெளிவு ஏற்படும்” – டாக்டர் சுப்ரா

“மலேசிய இந்திய பெருவியூகத் திட்டம், சமுதாய எதிர்பார்ப்புகளும், எதிர்காலமும்”

“மலேசிய இந்திய பெருவியூகத் திட்டம், சமுதாய எதிர்பார்ப்புகளும், எதிர்காலமும்”

December 12, 2017

இந்நாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால் அவர்களின் மாத வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனை அடிப்படையாக கொண்டே இந்தியர்களுக்கான பத்தாண்டு பெருந்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் வெற்றிப்பெறும் வேளையில் இந்தியர்கள் இதர இனத்தவர்களோடு போட்டியிடும் ஆற்றலையும், தலைநிமிர்ந்து கம்பீரமாக வாழ்வதையே தாம் காண விரும்புவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் *”மலேசிய இந்திய பெருவியூகத் திட்டம், சமுதாய எதிர்பார்ப்புகளும், எதிர்காலமும்”* எனும் தலைப்பில் நடைபெற்ற டவுன் ஹால் பாணியிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய விளக்க உரையில் சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் வழி, இந்நாட்டு இந்தியர்களில் 43 விழுக்காட்டினரின் குடும்ப வருமானம் மாதமொன்றுக்கு ஈராயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாகவே உள்ளது. இன்றைய வாழ்க்கை சூழலுக்கு அது போதாது. அதனைக் கல்வியின் மூலமே அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. எனவேதான் மஇகா, செடிக் மூலம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வியின் மூலம் உயர்ந்த நிலைக்கு வந்தாலே, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் உயர்வுக் காண முடியும் என டத்தோஸ்ரீ நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களுடன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணி மற்றும் செடிக் தலைமை இயக்குனர் பேராசிரியர் முனைவர் டத்தோ டாக்டர் என். எஸ். இராஜேந்திரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இடை இடையே, இம்மூவரும் பங்கேற்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

அரசாங்கம் வழங்க உறுதியளித்துள்ள ஏழு விழுக்காடு அரசாங்க வேலை வாய்ப்பை இந்திய சமுதாயம் முழுமையாகப் பெறுவதை செடிக் உறுதிச் செய்ய வேண்டும் என பல பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், சமய, அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், தனிநபர்கள் என ஐநூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

THE FEDERAL COURT JUDGEMENT ON 5TH DECEMBER 2017

IN RESPECT OF THE MIC-RoS CASE

“It is a great day as the Court of Appeal decision was reversed. however, there are certain facts about the case which I need to provide clarity.

Our legal counsels felt that despite the 8 Plaintiffs withdrawing there was a need for the issue to be addressed at the level of the Federal Court to revisit the decisions of the Court of Appeal. It was a real and serious concern as the Court of Appeal decision could have serious consequences on political parties and government in the future.

I am happy that the Federal Court listened to the submissions of the lawyers of the defendants and made a decision to reverse the decision of the Court of Appeal and restore the decision of the High Court.

DATUK SERI DR S.SUBRAMANIAM

PRESIDENT, MALAYSIAN INDIAN CONGRESS

KUALA LUMPUR

05 DECEMBER 2017