Majlis Perasmian Transformasi Rumah Ibadah

Majlis Perasmian Transformasi Rumah Ibadah

January 23, 2018

Datuk Seri Dr S. Subramaniam Presiden MIC telah menyempurakan Majlis Perasmian Transformasi Rumah Ibadah sebagai Pusat Masyarakat pada hari Ahad 21 Januari 2018. Sebanyak enam kuil akan dijadikan perintis kepada program transformasi tempat ibadat di seluruh negara.

Program anjuran SEDIC ini bertujuan memastikan kuil-kuil dalam negara dapat menjalankan aktiviti kemasyarakatan supaya menjadi agen perubahan socioekonomi masyarakat selain program berbentuk keagamaan.

 

ஜோகூர், கோத்தா திங்கியில் புதிய தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா!

ஜோகூர், கோத்தா திங்கியில் புதிய தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா!

January 22, 2018

“ஜோகூர், கோத்தா திங்கி, தாஜோல் தமிழ்ப்பள்ளி இன்னும் ஈராண்டுகளில் புதிய இடத்தில் செயல்படும். அப்பள்ளி முழு அரசாங்க உதவிப் பெற்ற பள்ளியாகும். இப்பள்ளி நிர்மாணிக்கப்பட மஇகா மேற்கொண்ட பல்வேறு முயற்சியினால் தற்போது மாநில அரசாங்கம் ஆறு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஜோகூர், கோத்தா திங்கியில் இப்புதியத் தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 21-ஆம் தேதி கலந்து கொண்ட பின்னர் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா செய்தியாளர்களிடம் பேசினார். பழையப் பள்ளி இடப் பற்றாக் குறையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தது. 12 வகுப்பறைகளுடன், இதர கற்றல் கற்பித்தல் வசதிகளுடன் அமைய விருக்கும் இப்புதியப் பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசாங்கம் கல்வி அமைச்சின் மூலம் 13 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது எனவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.அமைச்சர் மேலும் பேசுகையில், இப்புதியப் பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலம் கிடைத்திருப்பதால், பள்ளியில் அங்கீகரிக்கப்பட்டத் தரத்திலான விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்படும் என்றார்.

இப்பள்ளியில் தற்போது 250 மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றனர். இன்னும் ஈராண்டுகளில் இப்பள்ளிப் புதிய இடத்தில் செயல்படும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கோடி காட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மஇகா தலைவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

Majlis penyerahan bangunan baru SJK(T) Rumbia dengan kos RM 6.3 juta

Majlis penyerahan bangunan baru SJK(T) Rumbia dengan kos RM 6.3 juta

January 16, 2018

Datuk Seri Dr. S. Subramaniam , Menteri Kesihatan merangkap Presiden MIC telah mencadangkan kepada Kementerian Pendidikan bahawa pentingnya pembinaan infrastruktur seperti jalan dan laluan dimasukkan sekali pelan dan pakej dalam pembinaan sekolah Tamil pada masa hadapan.

Beliau berkata demikian dalam sidang akhbar semasa majlis penyerahan bangunan baru SJK(T) Rumbia pada tarikh 15 Januari 2018. Tapak bangunan baru sekolah ini merupakan bangunan yang telah direlokasikan dengan belanja sejumlah RM6.3 million ringgit. Sekolah dua tingkat yang dibina dengan segala kemudahan dilengkapi dengan segala kemudahan mempunhai 6 buah bilik darjah dan bilik lain . Pada tahun persekolahan ini seramai 120 orang pelajar mengikuti pelajaran dan seramai 18 orang pelajar telah didaftar masuk untuk darjah satu.

 

Walaupun, siap dibina beberapa bulan yang lalu namun sekolah ini telah mengalami beberapa rintangan dan cabaran seperti pembinaan laluan dan jalan masuk dari jalan raya utama ke kawasan sekolah. Ujar beliau, hasil kolaborasi dari wakil Parlimen, wakil DUN, LPS, PIBG dan pemimpin – pemimpin dalam negeri telah merealisasikan impian ini.

 

Beliau menasihati pihak tertentu untuk mengubah sikap yang seringkali membuat kritikan negatif mengenai perkembangan sekolah Tamil secara amnya. Tambah beliau, mereka tidak mampu untuk membuat kebaikan kepada masyarakat tetapi suka meracuni minda rakyat. Dalam hal ini, rakyat perlu memahami segala pengorbanan dan usaha pemimpin- pemimpin dalam pembinaan bangunan Baru sekolah Tamil.

 

மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

January 16, 2018

இந்நாட்டில் இந்தியர்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் காரணமாக அரசியல் பலத்தை இழந்துவிட்டால் அது அவர்களைப் பலவீனப்படுத்துவதோடு, காலப் போக்கில் அவர்களது அடையாளத்தையும் இழக்கச் செய்து விடும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இந்நாட்டைப் பொறுத்தவரை இந்தியர்கள் கல்வியாக இருந்தாலும் சரி, வீட்டுடைமையாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, கோவில் கட்டுவதாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடம் கட்டுவதாக இருந்தாலும் சரி போராடித்தான் பெற வேண்டியுள்ளது. எனவே, நாம் அரசியலில் பலமாக இருந்தால்தான் நமது கோரிக்கைகள் எடுபடும் என டாக்டர் சுப்ரா தெளிவுப்படுத்தினார்.

கோலாலம்பூர், ம இ கா தலைமையக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15 ஜனவரி 2018) ம இ கா தலைமையகமும்  ம இ கா கூட்டரசு பிரதேச தொடர்புக் குழுவும் இணைந்து நடத்திய சமுதாயப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், இந்தியர்களைப் பொறுத்தவரை ம இ கா ஓர் ஆலமரம். அனைவரையும் அரவணைத்துச் சென்று கொண்டிருக்கிறது. பொங்கல் உழைப்பவர்களின் நன்னாள் என்பதால் ம இ கா அதனை கடந்த ஆண்டு ஒற்றுமைப் பொங்கலாக நாடு முழுவதும் கொண்டாடியது. ஆனால், இவ்வாண்டு சமுதாய நலன் கருதி சமுதாயப் பொங்கல் எனும் கருப்பொருளில் கொண்டாடுகிறது. இது சமயப் பண்டிகை கிடையாது. எனவே சமய அடிப்படையில் கொண்டாடுவதை நம்மவர்கள் தவிர்க்க வேண்டும் என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ம இ கா மகளிர் பிரிவினரின் ஏற்பாட்டில் பொங்கல் வைக்கப்பட்டது. தை இரண்டாவது நாளான நேற்று  மாட்டுப் பொங்கல் என்பதால் அதை முன்னிட்டு கொண்டுவரப்பட்ட மாடுகளுக்கு பொங்கல் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூட்டரசு பிரதேச ம இ கா தலைவர் டத்தோ எம். சரவணன், ம இ கா தலைவர்கள், பொது மக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

ம இ கா சிலாங்கூர் – கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டம்

ம இ கா சிலாங்கூர் – கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டம்

January 18, 2018

தற்போது மஇகாவுக்கு இந்தியர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்தப் பொதுத் தேர்தலில் சிலாங்கூரிலுள்ள கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியையும், அதிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்ற முடியும் என மஇகா தேசியத் தலைவர்  டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

மலேசிய இந்தியர்களின் நலனுக்காக மஇகா தொடர்ந்து பல மேம்பாட்டுத் திட்டங்களை முறையாகவும் சிறப்பாகவும் அமல்படுத்தி வருவதால் இம்முறை பத்துமலைத் தொகுதி மக்கள் மஇகா வேட்பாளரையே நிச்சயம் தேர்வு செய்வர் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக சிலாங்கூர், பத்துமலையில் கோம்பாக் மஇகா தொகுதி ஏற்பாட்டிலான சிலாங்கூர் மாநில நிலையிலான ஒற்றுமைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர், அதிக இந்தியர்களைக் கொண்ட பத்துமலை சட்டமன்றத் தொகுதியில் நமது மொழியறிந்த, நமது உணர்வறிந்த, நமது கலை, கலாசாரம், பண்பாட்டை அறிந்த ஒருவரைத் தொகுதி மக்கள் தேர்வுச் செய்வதன் மூலமே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுக் காண முடியும். அதை விடுத்து விருப்பு வெறுப்புக்காக யாரையாவது ஒருவரைத் தேர்வுச் செய்தால் அதன் பாதிப்பை இறுதியில் எதிர்நோக்குவது தொகுதி மக்கள்தான் என டாக்டர் சுப்ரா தெளிவுப்படுத்தினார்.

மலேசியாவிலுள்ள ஏறத்தாழ 22 லட்சம் இந்தியர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்ற எண்ணமே எங்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. எனவே சமுதாய நலன் கருதி எங்களோடு நீங்களும் ஒன்றித்து பயணம் செய்ய வேண்டும் என இந்தியர்களை டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் பிரமுகர்களோடு, மஇகா தலைவர்கள், பொது மக்கள் என பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர். விருந்துபசரிப்பும் நடத்தப்பட்டது.