வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ம.இ.காவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை

வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ம.இ.காவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை

டத்தோ வி.எஸ்.மோகன்
தேசியத் தகவல் பிரிவுத் தலைவர்
பத்திரிகைச் செய்தி
திகதி : 12 பிப்ரவரி 2018
நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெறும் என்று ஆருடம் வெளியாகும் வேளையில் ம.இ.காவின் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில் நெருக்குதல் உள்ளது என்று ஒரு தமிழ் நாளிதழில் வெளியிட்டச் செய்தியில் உண்மை இல்லை என்று ம.இ.காவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது ஒவ்வொவொரு கட்சியின் தேசியத் தலைவரின் உரிமையாகும். அந்த அடிப்படையிலே ம.இ.காவின் தேசியத் தலைவர் தக்கத் தருணத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார். இது இம்முறை மட்டுமல்ல, எல்லாக் கால கட்டங்களிலும் பொதுத்தேர்தலின் இறுதி நேரத்தில்தான் வேட்பாளர்களின் பட்டியலை அறிவிப்பார்கள். இதையேதான் மற்ற தேசிய முன்னணி கட்சிகளும் குறிப்பாக அம்னோவும் கடைப்பிடிக்கிறது.
அந்த அடிப்படையிலே ம.இ.காவின் தேசியத் தலைவர் ஒவ்வொரு தொகுதியிலும், குறிப்பாக ம.இ.கா போட்டியிடவிருக்கும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் கேந்திரக் குழு, ஒரு மத்தியச் செயலவை உறுப்பினர், மாநில மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அக்குழுவானது அந்தந்தத் தொகுதிகளில் சிறப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் நடவடிக்கைகளும் சிறப்பான முறையிலே அந்தந்தத் தொகுதிகள் நடந்து வருகிறது. நமது ம.இ.கா கடந்தக் கால தேர்தலை காட்டிலும் இந்தப் 14-ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் காத்துக்கொண்டிருக்கிறது.
இதற்கு உறுதுணையாக வாக்காளர்களை அடையாளம் கானும் சூழ்நிலையும், ஆங்காங்கே நடைபெறும் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் அவ்வப்பொழுது வழங்கி வருகிறது இந்த தேர்தல் பணிகுழு. ஆதலால், நிச்சயமாக அதிக இந்தியர்கள் இம்முறை தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என்று ம.இ.காவின் மகளிர் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உறுதிபடுத்தியுள்ளனர்.
எல்லா விஷயங்களையும் சீர்துக்கிப் பார்த்துச் சிறப்பான முடிவுகளை இது நாள் வரை எடுத்துச் செயலாற்றியத் தலைவர் கண்டிப்பாக இப்பட்டியலை நேரம் வரும் போது வெளியிடுவார். ஆகவே, யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட மேண்டாம் என டத்தோ வி.எஸ்.மோகன் கேட்டுக்கொண்டார்.

மஇகா கோலக் குராவ் பொது மண்டபத்தை எழுப்பியிருப்பது பாராட்டுக்குரிய செயலாகும்

மஇகா கோலக் குராவ் பொது மண்டபத்தை எழுப்பியிருப்பது பாராட்டுக்குரிய செயலாகும்

February 12, 2018

 

“ஒரு தலைவர் என்பவர் மக்களின் தேவையறிந்து செயல்படக் கூடிய ஒருவராகவும், தாங்கள் பிரதிநிதிக்கக் கூடிய சமூகத்தின் பிரச்சனைகளை அறிந்து அதற்கு தீர்வுக் காணக் கூடியவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், பகாங், கோலக் குராவ் தொகுதி மஇகா தலைவர் மதிப்புக்குரிய டத்தோ முருகையா அதற்கு ஓர் எடுத்துக் காட்டாக திகழ்கிறார்” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் புகழாரம் சூட்டியுள்ளார்.

“டத்தோ முருகையா தமது தொகுதித் தலைவர்களின் ஒத்துழைப்புடன் தொகுதியில் சுமார் மூன்று லட்சம் ரிங்கிட் செலவில் மஇகா கோலக் குராவ் பொது மண்டபத்தை எழுப்பியிருப்பது பாராட்டுக்குரிய செயலாகும். அவர் என்றுமே தலைவராக இருக்கப் போவதில்லை. இன்னும் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு அவரால் தலைவராக சேவை வழங்க முடியும். ஆனால், அவர் இங்குள்ள மக்களுக்காக கட்டியுள்ள இந்த பொது மண்டபம் அவரது சேவையை இங்குள்ள மக்களுக்கு என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும். இதுதான் உண்மையான சேவையாகும்” என டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

 

பகாங், தெமர்லோவில் கோலக் கிராவ் ம இ கா தொகுதியின் முயற்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மண்டபத்தை கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தப் போது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஇகா நீண்ட வரலாற்றைக் கொண்ட கட்சியாகும். ஆங்காங்கு நமக்காக தனியாக ஒரு மண்டபம் இல்லையே என்கின்ற குறை அனைவரிடத்திலும் உண்டு. இன்று இந்த மண்டபத்தை திறந்து வைப்பதன் மூலம் தாம் பெருமைப்படுவதாக டத்தோஸ்ரீ மேலும் கூறினார்.

 

 

இந்நிகழ்ச்சியில் கோலக் கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹாஜி இஸ்மாயில் முகமட் சைட், கோலக் குராவ் தொகுதி மஇகா தலைவர் டத்தோ முருகையா, மஇகா தலைவர்கள், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள், பொது மக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Dr Subra meluluskan RM 100,000 kepada Kuil Sri Subramaniam, Mentakab

Dr Subra meluluskan RM 100,000 kepada Kuil Sri Subramaniam, Mentakab

February 10, 2018

Pada hari Khamis 8 Feb 2018 Presiden MIC Datuk Seri Dr S.Subramaniam mengambil peluang bersua muka dengan masyarakat  India di Bandar Mentakab. Sebagai ketua masyarakat yang prihatin, beliau telah berjanji dan meluluskan RM 100,00.00 kepada jawatankuasa Kuil Sri Subramaniam Bandar Mentakab bagi meringinkan beban mereka membeli satu bidang tanah bersebelahan dengan kuil tersebut.

 

காராக் தமிழ்ப் பள்ளி பொதுமண்டபத் திறப்பு விழா

காராக் தமிழ்ப் பள்ளி பொதுமண்டபத் திறப்பு விழா

February 09, 2018

நேற்று வியாழக்கிழமை பிப்ரவரி 8-ஆம் தேதி பகாங் மாநிலத்திற்கு ஒரு நாள் அலுவல் வருகை மேற்கொண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் காராக் தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட பொது மண்டபத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்தத் திறப்பு விழாவில் துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் கலந்து கொண்டார்.

 

 

“மாற்றங்களைக் கருத்தில் கொண்டு உயர்க் கல்வியை தேர்வு செய்வீர்” – டாக்டர் சுப்ரா வேண்டுகோள்

“மாற்றங்களைக் கருத்தில் கொண்டு உயர்க் கல்வியை தேர்வு செய்வீர்” – டாக்டர் சுப்ரா வேண்டுகோள்

February 08, 2018

“நாட்டில் அடுத்தப் பத்தாண்டுகளில் ஏற்படப் போகும் தொழிலியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் உயர்க் கல்வியை தேர்வு செய்ய வேண்டும்” என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் சிலர் இன்று வேலை வாய்ப்பின்றி இருப்பதற்கு அவர்கள் கடந்த காலத்தில் சந்தை வாய்ப்புக்களைக் கண்டறியாமல் உயர்க்கல்வியைத் தேர்ந்தெடுத்துத் தொடந்ததே அதற்கான முக்கிய காரணம் என்றார் அவர்.

கோலாலம்பூர், மலாய் மொழி ஆசிரியர் பயிற்சி கழகத்தில் செவ்வாய்க்கிழமை (6 பிப்ரவரி 2018) நடைபெற்ற “மலேசிய இந்தியர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஇகா புத்ராவும், கல்வி அமைச்சும் படிவம் நான்கு மற்றும் படிவம் ஐந்தில் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களுக்காக நாடு முழுவதும் கல்வி வழிகாட்டி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கருத்தரங்கின் வழி ஏறத்தாழ ஐயாயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கின் போது மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி விளக்கவுரை, உயர்க்கல்வித் தொடர்பான விளக்கங்கள், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது போன்ற விளக்கங்களோடு, அரசாங்க – தனியார் கல்லூரிகளின் முகப்புச் சேவையும் ஏற்படுத்தப்படும் என டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அவர்களுக்காக ம இ கா பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என அமைச்சர் மீண்டும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணி, கல்வி துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், மஇகா புத்ரா தலைவர் யுவராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.