இன்று மஇகாவுடன் பாஸ் இணக்கமான கருத்துப் பரிமாற்றம்!

இன்று மஇகாவுடன் பாஸ் இணக்கமான கருத்துப் பரிமாற்றம்!

ம இ காவும் பாஸும் இணைந்து அடுத்த கட்ட அரசியலை எப்படி எடுத்துச் செல்லலாம் என்றளவிலான கருத்து பரிமாற்றமொன்று இன்று ம இ கா தலைமையத்தில் ம இ கா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ துவான் குரு ஹாஜி ஹாடி ஹாவங் கும் நடத்தினர் பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பில் ம இ கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், ம இ கா உதவித்தலைவர்களான டத்தோ டி. மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன்

டத்தோ முருகையா உள்ளிட்ட ம இ கா முன்னணித் தலைவர்களுடன் மத்திய செயலவை உறுப்பினர்களும் ம இ கா தொகுதி காங்கிரசு தலைவர்களும் பரலாக கணிசமானயளவு கலந்து கொண்டனர்.

அதேபோன்று பாஸின் பல முன்னணித்தலைவர்களும் கொள்கை ரீதியிலான இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.

வரலாற்றுப் பூர்வமான இந்த சந்திப்பில் பாஸ் குறித்து எழுந்துள்ள தப்பும் தவறுமாக   கருத்துக்களுக்கு விளக்கமளிப்பப்பட்டது. இந்திய  சமூகத்தின் பிரச்சனைகள், அந்த சமூகம் எதிர்நோக்கும் எதிர் வினைகள் குறித்தும் பொதுவான அரசியல் பார்வையோடு அணுக வேண்டியது குறித்தும் அதேவேளை தேசிய அரசியலில் எத்தகைய முன்னெடுப்போடு பாஸூம்,- ம இ காவும் இணைந்து செயல்பட வேண்டுமென்ற கருத்திணக்கமும் இந்த பேச்சு வார்த்தையில் தீர்வுக்காணப் பட்டதென்றும் தெரிகிறது. ம இ கா அம்னோ, பாஸ் இவற்றுடன் மசீசவின் இணக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜசெக ஏற்கனவே பாஸுடன் வைத்துக் கொண்ட உறவும, இப்போது பாஸுடன் அக்கட்சி கொண்டுள்ள வேறுபாட்டால் மதவாதம் குறித்து விமர்சிப்பதும் அதை எத்தகைய அடிப்படையில் மக்கள் தவறாகக் கருத இடமளிக்கிறதென்றும் கருத்துக்களும் விவாதப் பொருளாகிய தென்றும் தெரிகிறது.

இரண்டு மணி்நேரத்திற்குப் பின்னர்  நிருபர்களிடமும் ம இ காதொகுத்தலைவர்களிடமும் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டது.