தமிழ்ப்பள்ளி விவகாரங்களை கவனிக்க அமைச்சரவையில் பிரதிநிதிகள் இல்லை!

தமிழ்ப்பள்ளி விவகாரங்களை கவனிக்க அமைச்சரவையில் பிரதிநிதிகள் இல்லை!

தமிழ்ப்பள்ளி விவகாரங்களை கவனிக்க அமைச்சரவையில் பிரதிநிதிகள் இல்லை என்று மஇகாவின் தேசிய நிர்வாகச் செயலாளர் டத்தோ அசோஜன் கூறினார். முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தை பிரதிநிதித்து கல்வி துணையமைச்சராக பொறுப்பி வகித்து வந்த டத்தோ கமலநாதன் முடிந்த அலவிற்கு இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் நலனுக்காக கடமையாற்றினார் என்றாலும் சில வேளைகளில் அவரை நாம் விரட்டிக்கொண்டே இருந்தோம்.

எனினும் இன்று தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து யாரிடம் குறைகளை தெரிவிப்பது என தெரியவில்லை. இந்தியர்களை பிரதிநிதித்து அன்று நமக்கென்று அமைச்சர், துணை அமைச்சர்கள் இருந்த காரணத்தினால் பெருவாரியான பள்ளிகளுக்கு நிறைவான சேவைகள் வழங்க முடிந்தது.

அதைப்போன்று இன்று நம்பிக்கை கூட்டணியின் அமைச்சரவையில் வீற்றிருக்கும் நான்கு இந்திய அமைச்சர்கள் நமது பள்ளிகள், அங்கு பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறைக் கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் மஇகா கோலாலங்காட் தொகுதியில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவினை துவக்கி வைத்து அவ்வாறு கூறினார்.

முன்னதாக பேசிய டத்தோ அசோஜன், ம இகா முந்தைய அரசாங்க ஆட்சியில் இருந்த போது பொங்கல் விழாவுடன் கூடிய தமிழர் திருநாள் நிகழ்வுகளை மாநிலம், தொகுதி, கிளை என நாடு தழுவிய அளவில் நடத்தி நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கடந்த அறுபது ஆண்டுகளாக கட்டிக் காத்து வந்தோம்.

எனினும் இன்று அரசாங்க ஆட்சியில் மஇகா இல்லாத போதும் நமது கலாச்சாரம் காணாமல் போய்விடக்கூடாது என்ற உணர்வுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் மஇகா கோலலங்காட் தொகுதி காங்கிரஸ் தமிழர் திருநாள் விழாவினை வெற்றிகரமாக நடத்துவது பாராட்டுகிரியதாகும் என தெரிவித்தார்.

கோலாலங்காட் ம இகா தொகுதிதலைவர் ச.சுரமணியம், சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ஶ்ரீதரன், மாநில மகளிர் பிரிவு தலைவர் கரம்பால் கவுர் ஆகியோர் கலந்து கொண்ட இவ்விழாவில் உரியடித்தல் தோரணம் பின்னுதல் ஓவியம் வரைதல் போட்டிகளுடன் பொங்கல் வைக்கும் போட்டியும் நடைபெற்றது.