2019 ஆண்டு எழுச்சிமிகு ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்

2019 ஆண்டு எழுச்சிமிகு ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்

மஇகா தேசிய தலைவரின் வாழ்த்துச் செய்தி

திகதி : 01 ஜனவரி 2019

இயற்கையின் அரவணைப்பில் சூரியக் கதிரொளி வெளிச்சம் பரப்பி, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சிப் பொங்கும் எழுச்சிமிகு ஆண்டாக  இந்த புத்தாண்டு அமைந்திட எனது இதயம்  கனிந்த  2019-இன் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகாவின் தேசிய தலைவருமான மாண்புமிகு டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

2)    மலேசிய மக்களான  நாம் மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளின்றி ஒற்றுமையாய் கொண்டாடும் ஆண்டின் துவக்கக் கொண்டாட்டம் இந்த ஆங்கில புத்தாண்டு ஆகும். ஒவ்வோர் ஆண்டும் இலக்கினை  வகுத்து அரும்பாடுப் பட்டு  நாம் அவ்விலக்கினை  அடைய முயற்சிக்கிறோம். இலக்குகள் முழுமை பெறாவிடினும் ஓரளவுக்குப் பூரத்தியடைவதை கண்டும் மனம் நிறைகின்ற நம்மில் இன்னும் சிலர் மனம் தளர்வதையும் காண முடிகிறது. இருந்தாலும் வெற்றியை விட விடா முயற்சியே ஒருவனை சாதனையாளனாய் மாற்றும் என்பது நிதர்சன உண்மையாகும்.  

3)    பிறக்கின்ற இந்த 2019-ஆம் ஆண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அன்பு, சகோதர மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் நிறைந்த ஆண்டாகவும், வளர்ச்சியும், மகிழ்ச்சியும் மக்களுக்குக் கிடைப்பதற்குத் துணை நிற்கின்ற ஆண்டாகவும் அமைந்திட வேண்டும். அதுபோலவே, இந்தியர்களாகிய நாம் நமது அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும், சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளைப் போற்றிப் பாதுகாத்திடவும் பாடுபடுவோம் என உறுதியேற்போம்.

4)    ஆகவே, கடந்த ஆண்டல் கண்டுற்ற சந்தோஷங்களை அளவுகோலாகவும் துன்பங்களை படிப்பினைகளாகவும் எடுத்துக்கொண்டு இவ்வாண்டின் துவக்கத்தை இனிதாய் வரவேற்று வெற்றி நடை போடுவோம். மீன்௶உம் உங்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தனதுரையில் குறிப்பிட்டார்.