சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்த து இனக் கலவரமல்ல!

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்த து இனக் கலவரமல்ல!

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்தது இனக் கலவரமல்ல!
தூண்டி விட்டவர்களை காவல்துறை அடையாளம் காட்ட வேண்டும்!
– தான்ஸ்ரீ விக்னேஷ்வரன்

சுபாங் ஜெயா, நவ.26-

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்தது இன கலவரமல்ல. மாறாக ஆட்களை ஏவி விட்டிருக்கிறார்கள் என்பதால் தாக்குதல்காரர்களுக்கு பின்னனியில் இருப்பவர்களை காவல் துறை அடையாளம் காட்ட வேண்டும் என்று ம இ கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் கூறினார்.
ஆலய நிலவரங்களை பார்க்கும் போது இந்த தாக்குதலில் மேம்பாட்டு நிறுவனத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் காவல் துறை மூடி மறைக்காமல் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆலயத்திற்கு நேரில் வந்த மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.Image result for seafield mariamman temple

இந்த விவகாரம் தொடர்பில் சுபாங் ஜெயா காவல்துறை முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆகையால் இதுகுறித்து புக்கிட் அமான் காவல் துறை திறந்த மனப்போக்குடன் விசாரணை நடத்த வேண்டும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இன்று நவம்பர் 26 அதிகாலை நடந்த தாக்குதலில் 200 அந்நிய குண்டர்கள் ஆலயத்தை முற்றுகையிட்டு அங்கிருந்தவர்களை தாக்கினர். மேலும் 18க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஒரு மணி நேரத்தில் இந்து மக்கள் கவனத்தை ஈர்த்ததால் குண்டர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். எனினும் 30க்கும் மேற்பட்ட அடையாள அட்டை, வாகன லைசென்ஸ் கைப்பற்றப்பட்டன.

 

இந்த ஆலய விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் காவல் துறை விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

Image result for seafield mariamman templeஆகையால், இந்த சம்பவம் குறித்து புக்கிட் அமான் காவல் துறை புலன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.
ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மஇகா சார்பில் 20 ஆயிரம் வெள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.