சண்முகசுந்தரம் சுடப்பட்டு மரணம்! மஇகா வன்மையாக கண்டிக்கிறது!

சண்முகசுந்தரம் சுடப்பட்டு மரணம்! மஇகா வன்மையாக கண்டிக்கிறது!

பினாங்கு கொம்தார் அருகில் சண்முகசுந்தரம் சுடப்பட்டு மரணம்! மஇகா வன்மையாக கண்டிக்கிறது! புலன் விசாரணை தேவை! மஇகா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் வலியுறுத்து.

        பினாங்கு கொம்தார் அருகில்  இந்திய இளைஞர் சுடப்பட்டு மரணமுற்ற  சம்பவத்தை மஇகா வன்மையாக கண்டிப்பதாக அதன் தேசிய தகவல் பிரிவ தலைவர் வே.குணாளன் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர், பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ தெய்வீகன்  புலன் விசாரணை நடத்த  வேண்டும் என்று வே.குணாளன் வலியுறுத்தியுள்ளார்.

சண்முகசுந்தரம் எனும் பெயர் கொண்ட அந்த இளைஞரை காவல் துறை அதிகாரி   காலில் சுட்டு கைது செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் தலையைக் குறி வைத்து சுட்டது அவர் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் எனும் சந்தேகம் எழுவதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் குணாளன் அவ்வாறு கூறினார்.
கடந்த காலங்களில் மஇகா என்ன செய்தது என்று அறிக்கை விட்டு வரும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் குறிப்பாக நான்கு அமைச்சர்கள் இதுகுறித்து ஏன் குரல் எழுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். பினாங்கு கொம்தார் கட்டடம் அருகில் கடந்த வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் டாக்சி ஓட்டுநருக்கு சண்முகசுந்தரத்திற்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் இதனால் அவர் காவல் துறையை தொடர்பு கொண்டதாகவும் தமக்கு தெரியவந்ததாக குணாளன் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த ஒரு காவல் துறை அதிகாரி கத்தியைக் காட்டி தம்மை குத்த வந்தார் என்பதற்காக சண்முகசுந்தரத்தின் தலைக்கு குறி வைத்து சுட்டதால் அவர் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து மரணமுற்றார். அந்த அதிகாரி கத்தியைக் காட்டிய சண்முகசுந்தரத்தை காலில் சுட்டு பிடித்திருக்கலாம்.  வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை வேட்டு கிளப்பியிருக்கலாம். அல்லது வேறு வழியைக் கையாண்டிருக்கலாம். ஆனால், அந்த அதிகாரி தலைக்குக் குறி வைத்து சுட்டது அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதால் பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ தெய்வீகன், போலீஸ் படைத் தலைவர் இதுகுறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று வே.குணாளன் கேட்டுக் கொண்டார்.