ம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன்! டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170

ம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன்! டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170

கோலாலம்பூர், மே 16-
ம.இ.கா. தேசியத் தலைவர் பதவியை தாம் தற்காக்கப் போவதில்லை என டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். ஜூலை 29ஆம் தேதி நடக்கும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் தாம் களமிறங்கப்போவதில்லை என இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் அவர் அறிவித்தார்.

அதேபோல், தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தாம் யாருக்கும் தனிப்பட்ட ஆதரவை வழங்கப்போவதில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஜூன் மாதம் மத்தியில் கட்சியின் கிளை, தொகுதி, மாநிலம், மத்தியச் செயலவைக்கான தேர்தல் நடக்கும். இதில் அதிகமான இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும்.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட போதே தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என்ற முடிவை தாம் எடுத்ததாகவும், இதில் எந்த வற்புறுத்தலும் இல்லை என டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.