சிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

சிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

April 09, 2018

 

தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை கடந்த சனிக்கிழமை 7  ஏப்ரல் 2018-ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (8 ஏப்ரல் 2018) ஷா ஆலாமில் சிலாங்கூர் தேசிய முன்னணியின் பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியீடு ஆயிரக்கணக்கில் திரண்ட ஆதரவாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் சிலாங்கூர் தேசிய முன்னணியின் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமார், மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகியோருடன் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.