கெராக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் டாக்டர் சுப்ரா

கெராக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் டாக்டர் சுப்ரா

February 18, 2018

நாடெங்கும் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல விருந்துபசரிப்புகள் சீனப் புத்தாண்டின் முதல் நாளில்  நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை பிப்ரவரி 16-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச தலைமையகத்தில் நடைபெற்ற மசீசவின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா, அதன் பின்னர் தலைநகர் செராசில் உள்ள கெராக்கான் கட்சியின் தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற கெராக்கான் கட்சியின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டார்.

கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ மா சியூ கியோங் அனைவரையும் வரவேற்றார். இந்த விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.