முதலாம் ஆண்டில் கல்வியைத் தொடரும் சுமார் ஐயாயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணப் பொருள்கள்.

4 January 2018Image may contain: 11 people கிள்ளான் . ம இ கா மேற்கொண்டுவரும் கல்வி உருமாற்றுத் திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் முதலாம் ஆண்டில் கல்வியைத் தொடரும் சுமார் ஐயாயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணப் பொருள்களை ம இ கா வழங்கியிருப்பதாக ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.Image may contain: 2 people, text

 

இன்று, கிள்ளான், சிம்பாங் லீமா தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” எனும் நிகழ்வின் வழி முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணப் பொருள்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசிய இந்தியர்களுக்காக அரசாங்கம் கடந்தாண்டு பத்தாண்டு வியூக பெருந் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அத்திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய அனைவரும் ம இ காவுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என டத்தோஸ்ரீ கேட்டுக் கொண்டார்.

Image may contain: 9 people, people smiling, people standing

தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்று இங்கு வழங்கப்படும் இந்த உதவிப் பொருள்களின் மூலம் இந்தியர்களின் வறுமை நிலையை முற்றாக குறைத்துவிட முடியாது. ஆனால், அதிக குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் குடும்பங்களின் பொருளாதார சுமையை சற்றுக் குறைக்க முடியும் என டத்தோஸ்ரீ நம்பிக்பைத் தெரிவித்தார்.

கல்வியின் மூலமே சமுதாயம் உயர்வு காண முடியும் என்பதால் ம இ கா கல்விக்கு அதிக முக்கியத்தும் அளித்து வருகிறது. எனவே மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலமே தங்களது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் நற்பெயரை ஈட்டித்தர முடியும் என டத்தோஸ்ரீ தெரிவித்தார். மலேசியாவில் சிம்பாங் லீமா தமிழ்பள்ளியில் தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். இன்று இந்நிகழ்வில் இப்பள்ளியில் இருந்து சுமார் 450 மாணவர்கள் புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணப் பொருள்களை டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.Image may contain: 5 people, people sitting and child

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், அருகே தாமான் செந்தோசாவில் சுமார் 20 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுவரும் புதியத் தமிழ்ப்பள்ளி செயல்படத் தொடங்கியதும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஏற்பட்டுள்ள மாணவர் நெருக்கடிப் பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வுக் காண முடியும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் கல்வி துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், டி என் பியின் சிலாங்கூர் மாநில நிர்வாகி முகமட் சைட், ம இ கா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல், பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சந்திரன், ம இ கா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, ம இ கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ், ம இ கா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் ஆர். எஸ். மணியம், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.