மஇகா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் டாக்டர் சுப்ரா

மஇகா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் டாக்டர் சுப்ரா

December 30, 2017

நேற்று வெள்ளிக்கிழமை (29 டிசம்பர் 2017) ம.இ.கா தலைமையகத்தில் விருந்துபசரிப்புடன் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மலேசியர்களிடையே இனம், மதம் பாகுபாடின்றி ஒற்றுமை உணர்வை ம.இ.கா வேரூன்ற செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

 

மேலும், கோலாலம்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ள 3 சிறுவர் காப்பகக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் அன்பளிப்பையும் டாக்டர் சுப்ரா எடுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், டாக்டர் சுப்ராவுடன் பாதிரியார் பிரெட்ரிக், சென்னையிலிருந்து வருகையளித்திருக்கும் பாதிரியார் டேவிட், மலேசிய கத்தோலிக்க மத தேவாலயங்களுக்கான தலைவர் டான்ஸ்ரீ மெர்பி பாக்கியம் உட்பட இதர ம.இ.கா தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து மத சார்பான பெருநாட்களையும் மஇகா தொடர்ந்து கொண்டாடி வருகின்றது. அந்த வரிசையில் நேற்று கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் மஇகா தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.