மலாக்கா மாநில மஇகாவின் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்பு

மலாக்கா மாநில மஇகாவின் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்பு

November 19, 2017

மாநிலம் தோறும் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்புகளை மஇகா நடத்தி வருகிறது. இந்த வரிசையில் மஇகா மலாக்கா மாநிலத்தின் தீபாவளி நல்லெண்ண விருந்து கடந்த வெள்ளிக்கிழமை 17 நவம்பர் 2017 மலாக்காவில் உள்ள ஆயர் குரோவில் நடைபெற்றது.

இந்தத் தீபாவளி விருந்துபசரிப்பில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கலந்து கொள்ள, சிறப்பு விருந்தினராக மலாக்கா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் கலந்து கொண்டார்.

திரளான அளவில், மஇகா கிளை மற்றும் தொகுதித் தலைவர்களும், மத்திய செயலவை உறுப்பினர்களும் இந்த தீபாவளி நல்லெண்ண விருந்தில் கலந்து சிறப்பித்தனர்.