சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்.. ம.இ.கா தலைவர் சூளுரை

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்.. ம.இ.கா தலைவர் சூளுரை

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு மாநிலத்திலுள்ள அனைத்து ம இ கா தலைவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.நாட்டின் அடுத்தப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்ப்படுவதால் ம இ கா தலைவர்கள் கட்சியின் வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ கேட்டுக் கொண்டார். சிலாங்கூர், ஷாஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் கலாசார மையத்தில் சிலாங்கூர் மாநில ம இ காவின் 71வது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.

ம இ கா பாரம்பரிய அடிப்படையில் சிலாங்கூரில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளிலும், மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். அதனை யாருக்கும் கட்சி விட்டுக் கொடுக்காது. சிலாங்கூரில் மற்ற உறுப்புக் கட்சிகள் வெற்றிப்பெற்று ம இ கா மட்டும் தோல்வியுற்றால் அது கட்சிக்கு மிகப் பெரிய தோய்வாக அமைந்துவிடும் என டத்தோஸ்ரீ நினைவுறுத்தினார்.

இந்தியர்கள் இன்று எதிர்நோக்கிவரும் சில இன்னல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டட சில முடிவுகளே காரணங்களாகும். எனவே, வருங்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு ம இ கா தலைவர்கள் இனி முக்கிய முடிவுகள் எடுப்பது அவசியமாகும் என டத்தோஸ்ரீ மேலும் கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (27 ஆகஸ்ட் 2017) நடைபெற்ற மஇகா சிலாங்கூர் மாநிலப் பேராளர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிகள் வசமிருந்து கைப்பற்றும் தேசிய முன்னணியின் திட்டத்திற்கு மஇகா முக்கிய பங்காற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

இதற்குக் காரணம் சிலாங்கூரில் உள்ள சுமார் 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பதால், அந்த இந்திய வாக்குகளை மஇகா கவர முடியும் என்றும் டாக்டர் சுப்ரா கூறினார். இந்திய வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் ஆற்றலும், கட்சிக் கட்டமைப்பும் மஇகாவுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார். சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் வெற்றி கொள்வதற்கான கடமையும் பொறுப்பும் மஇகாவுக்கு இருக்கிறது என்றும் அவர் சிலாங்கூர் மாநிலப் பேராளர்களிடம் தெரிவித்தார்.இன்றைய பேராளர் மாநாட்டில் ம இ காவின் மத்திய செயலவை உறுப்பினர்களோடு, கிளைத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1173118239498759&id=686628718147716