இந்தியர்களின் சமூகவியல் இடர்களுக்கு ம.இ.கா தீர்வுக்காணும்.

இந்தியர்களின் சமூகவியல் இடர்களுக்கு ம.இ.கா தீர்வுக்காணும்.

இந்தியச் சமூகத்தில் அதிகரித்துவரும் சமூகவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண ம இ கா வின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.  மலேசியாவில் எப்பகுதியில் இந்தியர்களுக்குப் பிரச்சனை என்றாலும் மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது ம இ கா மட்டும்தான். எனவே, இந்தியர்களின் நாடியிலும், நரம்பிலும் ஒன்றாக கலந்து விட்ட ம இ கா, உதவி என்று வரும் எவரையும் கைவிடாது என டத்தோஸ்ரீஉறுதியளித்தார்.

சிலாங்கூர், ஷாஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் கலாசார மையத்தில் சிலாங்கூர் மாநில ம இ கா மகளிர், இளைஞர், புத்ரி, புத்ரா பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.

மலேசியாவில் இதர இனங்களோடு ஒப்பிடுகையில் இந்தியர்களுக்குப் பிரச்சனைகள் அதிகம். அது தனிப்பட்டவர்களது பிரச்சனைகளாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அது இந்திய சமூகப் பிரச்சனையாக கருதப்படுகிறது. எனவே, குறிப்பாக ம இ கா மகளிர் பிரிவினர் இந்திய சமூகத்தில் குடும்ப அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட வேண்டும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் தெளிவுப்படுத்தினார்.

இம்மமாநாட்டில், தேசிய இளைஞர் தலைவர் டத்தோ சிவராஜா சந்திரன், தேசிய மற்றும் மாநில மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, தேசிய புத்ரா தலைவர் திரு. யுவராஜா மணியம், தேசிய புத்ரி தலைவி குமாரி குணசுந்தரி, மாநில இளைஞர் தலைவர் திரு. கஜேந்திரன், மாநில புத்ரி தலைவி குமாரி சிவரஞ்சனி, மாநில புத்ரா தலைவர் திரு. ஷசி ஆகியோரோடு பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.