தோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி

தோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி

இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காண முற்பட்டதாகவும், அதற்கு இன்றுதான் காலம் கனிந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.

மலேசிய வரலாற்றில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்குத் தரை வீடுகள் வழங்க முன் வந்துள்ள பிரதமர் அவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ம இ கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ள அனைவரும் இனி நல்ல சூழலில் அமைதியான வாழ்க்கையை வாழ தாம் இறைவனிடம் பிரார்த்திப்பதாக மேலும் கூறினார்.

டிங்கில், அம்பார் தெனாங்கில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்காக மக்கள் வீடமைப்புத் திட்ட கால் கோள் நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர், பிரதமர் டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் உரையாற்றினார். அவர் தமதுரையில் தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கியுள்ள 216 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு அம்பார் தெனாங்கில் கட்டப்படும் தரை வீடுகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

அங்கு வீடுகளைக் கொண்டுள்ள மற்றவர்கள் ஆக குறைந்த கட்டணமாக 20 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும். ஒரு வீட்டின் நிகர விலை 150 ஆயிரம் ரிங்கிட்டாகும். இந்த மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் அரசாங்கம் 404 வீடுகளைக் கட்ட விருக்கிறது. அதற்காக மத்திய அரசாங்கம் 60 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இந்த வீடுகள் 2019 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பிரதமர் மேலும் கூறினார்.நாட்டின் நிர்வாக மையமாக புத்ராஜாயா மேம்படுத்தப்பட்டப்போது அப்பகுதியில் வசித்த நான்கு தோட்டங்களைச் சேர்ந்த 216 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் டிங்கில் அருகே அமைக்கப்பட்ட தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர். அங்கு வாழ்பவர்கள் அன்று தொட்டு இன்று வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதால், அரசாங்கம் இம்முடிவை எடுத்திருப்பதாக டத்தோஸ்ரீ நாஜிப் தெரிவித்தார்.

 

இன்றைய வரலாற்றுப்பூர்வ நிகழ்வில் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் டான்ஸ்ரீ நோர் ஓமார், குடியிருப்போர் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.